ஜிஎம் நிறுவனத்தின் அங்கமான செவர்லே க்ரூஸ் காரில் இக்னிஷன் இழப்பு அல்லது குறைந்த வேகத்தில் ஏற்படும் எஞ்சின் ஸ்டால் பிரச்சனையை சரிசெய்யும் நோக்கில் 2009-2011 வரை தயாரிக்கப்பட்ட கார்களை செவர்லே திரும்ப அழைக்க உள்ளது.
2009 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட 22,000 கார்களில் இந்த பிரச்சனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதால் சுயமாக முன்வந்து கார்களை திரும்ப அழைத்து சோதனைகளை செய்ய உள்ளது. இந்த சோதனை மற்றும் சரி செய்வதற்கு எவ்விதமான கட்டனமும் வசூலிக்கப்படமாட்டாது.
உங்கள் டீலர்களின் வாயிலாக உங்களுக்கு அழைப்பு அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அனுகினால் இதற்கு உண்டான தீர்வினை தர உள்ளதாக செவர்லே தெரிவித்துள்ளது. பரிசோதனை மற்றும் பிரச்சனை சரிசெய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு கூடுதலான கால அவகாசம் தேவைப்படும்.
விற்பனைக்கு பின் பிரிவு துனை தலைவர் மார்கஸ் ஸ்டெர்ன்பெர்க் கூறுகையில் .. நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான வாகனங்களை வழங்கம் பொருட்டு செயல்படுவதனால் இதுபோன்ற பிரச்சனைகளை சுயமாக முன்வந்து பரிசோதனை செய்து அதற்கு உண்டான தீர்வினை வழங்க உள்ளோம் என கூறியுள்ளார்.