சொகுசு ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் அறிமுகம்

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சொகுசு ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி (Range Rover SVAutobiography)காரினை அறிமுகம் செய்துள்ளனர்.

ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார்

தற்பொழுது விற்பனையில் உள்ள ரேஞ்ச்ரோவர்  ஆட்டோபயோகிராஃபி பிளாக் மாடலுக்கு மாற்றாக இந்த புதிய எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய எஸ்விஆட்டோபயோகிராஃபி காரில் மேல்பகுதியில் கருப்பு வண்ணத்துடன் 9 வண்ணங்களில் கிடைக்கும்.

பாரம்பரியமான முகப்பு தோற்றத்தினை கொண்டுள்ளது .முகப்பு கிரில் குரோம் பூச்சூ பூசப்பட்டுள்ளது. பின்புறத்தில் எஸ்விஆட்டோபயோகிராஃபி என்ற முத்திரையை பின்புற கதவுகளில் பொறித்துள்ளனர்.

மிக நவீன சொகுசு ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கும் உட்புறத்தில் மிக நேர்த்தியான உயர்தர லெதர் இருக்கைகளை பயன்படுத்தியுள்ளனர் . உட்ப்புற கேபினில் பல நவீன வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும்.

பூட்டில் பொருட்களை ஏற்ற மற்றும் இறக்குவதற்க்கு இலகுவாக இருக்கும் வகையில் ஸ்லைடிங்காக நகரும் தரை கொடுத்துள்ளனர்.

542பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் SDV8 மற்றும் SDV6 ஹைபிரிட் என்ஜின் மாடலிலும் கிடைக்கும்.

ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி ஸ்டான்டர்டு மற்றும் லாங்வீல் பேஸ் என இரண்டு வகையிலும் கிடைக்கும்.

ஜெஎல்ஆர் நிறுவனத்தின் சிறப்பு வாகன பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மிகுந்த ஆடம்பர வசதிகளை கொண்ட நவீன சொகுசு காராக ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி உருவாக்கப்பட்டுள்ளது.

படங்களை பெரிதாக படங்களில் கிளிக் பன்னுங்க

ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் படங்கள்

ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் Range Rover SVAutobiography 2ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் Range Rover SVAutobiography 9Range Rover SVAutobiography 10Range Rover SVAutobiography 11ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார்ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார்Range Rover SVAutobiography 18ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார் Range Rover SVAutobiography 20ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி கார்

ரேஞ்ச்ரோவர் எஸ்விஆட்டோபயோகிராஃபி  கார் வீடியோ