ஜாகுவார் எக்ஸ்இ காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்

இந்தியாவில்  ஜாகுவார் எக்ஸ்இ காரில் புதிதாக பிரிஸ்டீஜ் என்ற பெயரில் புதிய வேரியண்டினை ரூ.43.69 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக புதிய ஜாகுவார் XE இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விற்பனையில் உள்ள  ஜாகுவார் எக்ஸ்இ காரில்  இருவிதமான ஆற்றலை வழங்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 197 hp ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் பூயூர் வேரியண்ட் மற்றும் 240 hp ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் போர்ட்ஃபோலியோ வேரியண்ட் இரண்டிலும் 8 வேக எலக்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் 240 hp ஆற்றலை வழங்கும் மாடல் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 6.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். கூடுதலாக வந்துள்ள பிரிஸ்டீஜ்  வேரியண்டில் 197 hp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பிரிஸ்டீஜ் வேரியண்டில் சிலைடிங் மேற்கூறை , டாரஸ் லெதர் இருக்கை , ஒட்டுநர் இருக்கை நினைவு வசதி , இன்டிரியர் மூட் லைட்டனிங் , 380 W மெரீடியன் சவூன்ட் சிஸ்டம்மற்றும் ரியர் வீயூ கேமரா போன்றவை இடம்பெற்றுள்ளது.

ஜாகுவார் எஃப் டைப் மாடலின் டிசைன் தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்இ காரின் முகப்பில் ஜாகுவாரின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் கூடிய மிக சிறப்பான ஸ்டைலிங் தோற்றத்தினை கொண்டுள்ள புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன் J வடிவ பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது. இந்தியாவிலே ஜாகுவார் XE கார் உற்பத்தி செய்யப்படுகின்றது

ஜாகுவார் எக்ஸ்இ விலை பட்டியல்

Jaguar XE 2.0L Petrol (147 KW) PURE at INR 39.9 Lacs

 

Jaguar XE 2.0L Petrol (147kW) PRESTIGE at INR 43.69 Lacs

 

Jaguar XE 2.0L Petrol (177kW) PORTFOLIO at INR 47.99 Lacs
All prices are ex-showroom in Mumbai, at pre-octroi level.

Jaguar XE launched photo gallery – Auto Expo 2016

[envira-gallery id=”6174″]

Exit mobile version