Site icon Automobile Tamilan

டட்சன் கோ கார் அறிமுகம்

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் டட்சன் பிராண்டில் கார்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றது. டெல்லியில் நடந்த அறிமுக விழாவில் முதல் டட்சன் சிறிய ரக காரை அறிமுகம் செய்துள்ளது.
டட்சன் கோ என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 2.90 லட்சம் முதல் 3.60 லட்சத்திற்க்குள் விற்பனைக்கு வரலாம். கோ காரில் மைக்ராவில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
ட்டசன் கோ கார்
முன்பக்க இருக்கை பெஞ்ச் இருக்கையாகும் அம்பாசிடர் காரில் உள்ளது போல இருக்கும். கோ காரில் 5 பெரியவர்கள் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் இடவசதி இருக்கும்.
கியர் லிவர் மற்றும் ஹேன்ட் பிரேக் டேஸ்போர்டில் பொருத்தப்பட்டுள்ளது. தனியான க்ளாவ் பாக்ஸ் கொடுக்கப்படவில்லை. ஆனால் மிக சிறப்பான இடவசதியை கொடுக்கும்.
மைக்ரா காரைவிட அதிகப்படியான வீல் பேஸை கொண்டதாகும். கோ காரின் நீளம்: 3,785மிமீ அகலம்: 1,635மிமீ உயரம்: 1,485மிமீ வீல்பேஸ்: 2,450மிமீ.
விலை குறைவான கார் என்றாலும் பிரிமியம் கார்களுக்கு இனையான தரத்தினை தரும். மேலும்  நடுத்தர மக்களின் கனவை நிறைவேற்றும் ட்டசன் என்று நிசான் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் கூறியுள்ளார்.
அடுத்த வருடத்தில் டட்சன் கோ விற்பனைக்கு வரும். மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு மிக பெரிய சவாலை டட்சன் தரவுள்ளது.

Exit mobile version