Automobile Tamil

டட்சன் ரெடிகோ கார் அறிமுகம்

நிசான் பட்ஜெட் விலை பிராண்டான டட்சன் பிராண்டில் புதிய டட்சன் ரெடிகோ கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ க்விட் காரை விட குறைவான விலையில் ரெடிகோ வரவுள்ளது.

Datsun-redi-GO-launched

 

இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் சர்வதேச அளவில் ரெடிகோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வருகின்ற மே 1ந் தேதி முதல் ரெடிகோ காருக்கு முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து டெலிவரி ஜூன் 1ந் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஸ்ஓவர் தாத்பரியங்களை கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடலாக வந்துள்ள ரெடிகோ கார் ரெனோ – நிசான் கூட்டணியில் உருவான CMF-A ( Common Module Family – architecture ) தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே தளத்தில் உருவாக்கப்பட்ட மாடல்தான் ரெனோ க்விட் ஆகும்.

2014 ஆம் ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெடிகோ கான்செப்ட் மாடலுக்கு இணையாகவே உற்பத்தி நிலை மாடல் அமைந்துள்ளது. எந்த சாயிலிலும் டட்சன் முந்தைய மாடல் வரிசான கோ மாடலை சார்ந்திருக்காமல் இருக்கின்றது. வழக்கமான டட்சன் பாரம்பரிய அறுங்கோண கிரிலுக்கு மத்தியில் அமைந்துள்ள லோகோ , நேர்த்தியான முகப்பு விளக்குகள் எடுப்பான தோற்றத்துடன் விளங்கும் க்ராஸ்ஓவர் மாடலை அடிப்படையாக கொண்ட ஹேட்ச்பேக் காராக விளங்குகின்றது.

பக்ககவாட்டில் அமைந்துள்ள புராஃபைல் கோடுகள் பின்புறம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தோற்றம் வெகுவாக புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

 

உட்புறத்தில் சராசரியான தோற்ற பொலிவினை வழங்கும் டேஸ்போர்டு பெற்றுள்ளது. இதில் தொடுதிரை அமைப்பு இடம்பெறவில்லை. ஆடியோ சிஸ்டம் மட்டுமே பெற்றுள்ளது. எளிமையான தோற்றத்தினை கொண்டுள்ள இருக்கைகள் சிறப்பான இடவசதி வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

க்விட் (3679மிமீ) காரை விட நீளம் குறைவாக கொண்டுள்ள ரெடிகோ (3430மிமீ) காரின் வீல்பேஸ் (ரெடி கோ – 2430மிமீ , க்விட் -2422மிமீ ) அதிகமாக உள்ளது. மேலும் உயரமும் அதிகமாக உள்ளது (ரெடி கோ – 1540மிமீ , க்விட் -1478மிமீ).

இதில் க்விட் காரில் பொருத்தப்பட்டிருந்த 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் 1.0 லிட்டர் இஞ்ஜின் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் வரவுள்ளது.

மாருதி ஆல்ட்டோ , ஹூண்டாய் இயான் , ரெனோ க்விட் மற்றும் டாடா நானோ போன்ற கார்களுடன் போட்டியிடும் வகையில் டட்சன் ரெடிகோ வந்துள்ளது. எதிர்பார்க்கப்படும் தொடக்க விலை ரூ.2.50 லட்சம். விலை விபரங்கள் வருகின்ற ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.

ரெடிகோ காரின் படங்கள்

[envira-gallery id="6970"]

Exit mobile version