டட்சன் ரெடிகோ கார் ஏப்ரல் 14யில் அறிமுகம்

நிசான் நிறுவனத்தின் குறைந்த விலை பிராண்டான டட்சன் பிராண்டில் புதிய டட்சன் ரெடிகோ ஹேட்ச்பேக் கார் ஏப்ரல் 14யில் டெல்லியில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரெனோ க்விட் தளத்தில் ரெடிகோ உருவாக்கப்பட்டுள்ளது.

datsun-redigo-hatchback

ரெனோ நிசான் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய குறைந்த விலை பிளாட்ஃபாரம் CMF-A தளத்தில் உருவாக்கப்பட்ட முதல் காரான ரெனோ க்விட் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து டட்சன் பிராண்டில் வரவுள்ள ரெடிகோ காரும் எஸ்யூவி தாத்பரியங்களை கொண்டதாக விளங்குகின்றது.

மேலும் படிங்க ; ரெனோ க்விட் கார் விபரம்

டட்சன் பிராண்டின் முந்தைய மாடல்களான கோ மற்றும் கோ + மாடல்கள் பெரிதாக இந்திய சந்தையில் வெற்றி பெறாத நிலையில் தற்பொழுது வரவுள்ள ரெடிகோ மாடல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. க்விட் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 800சிசி என்ஜினை பெற்றிருக்கலாம் அல்லது கோ காரில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஏஎம்டி கியர்பாக்சும் இடம்பெற வாய்ப்புள்ளது.

மாருதி ஆல்ட்டோ , ஹூண்டாய் இயான் மற்றும்ரெனோ க்விட் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைய உள்ள ரெடிகோ காரின் விலை ரூ. 2.65 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Exit mobile version