டட்சன் ரெடி-கோ கார் விற்பனைக்கு அறிமுகம்

0

ரூ.2.39 லட்சம் தொடக்க விலையில் டட்சன் ரெடி-கோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. க்விட் , ஆல்ட்டோ 800 மற்றும் இயான்  போன்ற கார்களுக்கு போட்டியாக ரெடி-கோ அமைந்துள்ளது.

datsun-redi-go-launched

 

98 % உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்ட க்விட் காரினை போலவே உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்ட காராக ரெடிகோ விளங்குகின்றது. ரெடி-கோ காரில் ராஜெக்ட்ர் முகப்பு விளக்கு , பகல் நேர ரன்னிங் விளக்கினை பெற்று சிறப்பான மற்றும் எடுப்பான முகப்பு தோற்றம் தரவல்ல பானெட் கொண்டுள்ளது. பக்கவாட்டில் ஸ்டைலிங்கான புராஃபைல் கோடு , சிறப்பான ஸ்டைல் கொண்ட வீல் கேப்பினை 13 இஞ்ச் ஸ்டீல் வீலில் பெற்றுள்ளது.

54 hp  ஆற்றலை மற்றும் 72 Nm இழுவைதிறனை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ரெடி-கோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.17 கிமீ ஆகும்.

கோ ,கோ ப்ளஸ் போன்ற கார்களில் உள்ளதை போலவே இன்டிரியர் அமைப்பினை பெற்றுள்ள டேஸ்போர்டில் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ள பட்டன்கள் மற்றும் குளோவ் பாக்ஸ் போன்றவை  அமைக்கப்பட்டுள்ளது. முன் இருபக்க வீன்டோகளுக்கும் பவர் வீன்டோஸ் சேர்க்கப்பட்டுள்ளது. க்விட் காரை போல தொடுதிரை அமைப்பினை பெறவிட்டாலும் ஆடியோ சிஸ்டத்தில் ரேடியோ ,சிடி , யூஎஸ்பி ,ஆக்ஸ் தொடர்புகளை பெற இயலும்.

டட்சன் ரெடி-கோ விலை பட்டியல்

Redi-go D – ரூ. 2.39 லட்சம்

Redi-go A – ரூ. 2.83 லட்சம்

Redi-go T – ரூ. 3.09 லட்சம்

Redi-go T(O) – ரூ. 3.19 லட்சம்

Redi-go S – ரூ. 3.34 லட்சம்

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் )

டட்சன் ரெடி-கோ சிறப்பு பார்வை