இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் மற்றும் கோவை ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் கூட்டணியில் சிறப்பு பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்போர்ட்டிவ் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளது. ஜெடி ஸ்பெஷல் வெய்கிள் நிறுவனம் என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ளது.

சிறப்பு பெர்ஃபாமென்ஸ் கார்கள்

  • ஜெடி ஸ்பெஷல் வெய்கிள் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது.
  • 50:50 க்கு என்ற கூட்டணியில் இருநிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளது.

மெர்சிடிஸ் நிறுவத்தின் ஏஎம்ஜி , பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் பிரிவு மற்றும் ஜெஎல்ஆர் நிறுவனத்தின் ஸ்பெஷல் வெய்கிள் பிரிவு போன்ற நிறுவனங்களை அடிப்படையாக கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கூட்டணியில் பட்ஜெட் விலையில் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சமீபத்தில் டாடாவின் புதிய ஸ்போர்ட்டிவ் பிராண்டான டாமோ-வின் முதல் கார் மாடலான ரேஸ்மோ காரினை தொடர்ந்து பல கார்களை அறிமுகம் செய்ய ஜெடி கூட்டணி திட்டமிட்டுள்ளது.

கோவை ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனம் சிறப்பு பெர்ஃபாமென்ஸ் கார்களுக்கான ப்ரோட்டோடைப் வாகனங்கள் , ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இரு நிறுவனங்களின் கூட்டணி வாயிலாக மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படுவதுடன் பல்வேறு விதமான கஸ்டமைஸ் வசதிகள் , வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான கஸ்டமைஸ் போன்றவற்றை செய்யும் வாய்ப்புகளும் உள்ளது.

இந்த சிறப்பு வாகனங்களை டாடாவின் டீலர்கள் வாயிலாகவோ அல்லது தனியான சிறப்பு ஜெடி டீலர்கள் வாயிலாகவோ விற்பனை செய்யப்படலாம், டீலர் குறித்தான தகவல்கள் மாடல்களை அறிமுகம் செய்யப்படும் பொழுது வெளியிட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக டாடாவின் டியாகோ ,ஹெக்ஸா மற்றும் டிகோர் போன்ற கார்களில் சிறப்பு கஸ்டமைஸ் மற்றும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வாகனங்கள் தயாரிக்கப்படலாம். கஸ்டமைஸ் செய்யப்பட்ட வாகனங்கள் கோவையில் உள்ள ஜெயம் நிறுவனத்திலே அசெம்பிளிங் செய்யப்படலாம்.

இந்த கார்களின் விலை ரூ. 50,000 முதல் ரூ.1,00,000 வரை கூடுதலாக இருக்கலாம்.