டாடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணி ?

டாடா மோட்டார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் குழுமமும் இணைந்து செயல்படுவதற்கான திட்டத்தினை 87வது ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிவிப்புகள் வெளியாகலாம். டாடா-ஃபோக்ஸ்வேகன் தங்களுடைய பிளாட்பாரத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.

டாடா-ஃபோக்ஸ்வேகன்

உலகின் முதன்மையான ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் ,இந்தியாவின் டாடா மோட்டார்சுரும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோ எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது இரு நிறுவனங்களும் இணைந்து தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களையோ அல்லது பிளாட்ஃபாரம் சார்ந்த தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

டாடாவின் புதிய டாமோ பிராண்டிற்கு உருவாக்கப்பட்டுள்ள AMP பிளாட்பாரம் நுட்பங்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளலாம் . மேலும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 நுட்பங்களை டாடா மோட்டார்சுடன் பகிரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டணி உருவாகும் பட்சத்தில் கார்களின் தரம் மற்றும் நுட்பம் சார்ந்த விடயங்களை இரு நிறுவனங்களும் மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வருகின்ற மார்ச் 7ந் தேதி டாமோ பிராண்டில் புதிய கான்செப்ட் மாடல் 87வது ஜெனிவா மோட்டார் கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்யப்படலாம். சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் கனெக்டெட் கார் நுட்பங்கள் சார்ந்த சேவைகளை பெறுவதற்கு புரிந்துணர்வு ஓப்பந்தம் ஒன்றை டாடா மேற்கொண்டுள்ளது.

Exit mobile version