Automobile Tamil

டாடா அதிரடி : அடுத்தடுத்து 6 யுட்டிலிட்டி கார்கள்

டாடா கார் நிறுவனம் வரும் 2017 ஆம் ஆண்டிற்க்குள் 6 புதிய யுட்டிலிட்டி கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்க்கான தீவர முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் எடுத்துவருகின்றது.
டாடா ஹைக்ஸா

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் யுட்டிலிட்டி வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வந்த டாடா மோட்டார்ஸ் மஹிந்திராவில் பொலிரோ மற்றும் ஸ்கார்பியோ வரவால் சுமோ மற்றும் சபாரி   கார்கள் வரவேற்பினை இழந்தது. இழந்த சந்தையை ஈடுகட்டுவதற்க்காக டாடா மோட்டார்ஸ் அடுத்தடுத்து 6 புதிய கார்களை 2017க்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

டாடா ஹைக்ஸா

டாடா ஆரியா எம்பிவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஹைக்ஸா கிராஸ்ஓவர் கான்செப்ட் மாடல் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. வரும் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் பற்றி நாம் முன்பே பதிவிட்டிருந்தோம். எக்ஸ்104 என்ற குறியீட்டு பெயரில் 4 மீட்டருக்கு குறைவான எஸ்யூவியாக மினி எவோக் போன்ற தோற்றத்தில் விளங்கும்.  ஆகஸ்ட் 2016யில் விற்பனைக்கு வரலாம். எக்ஸ்104 பற்றி படிக்க டாடா நெக்ஸான்

டாடா ரேப்டார்

சுமோ போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட உள்ள ரேப்டார் அல்லது எக்ஸ்601 குறியீட்டு பெயரில் 9 இருக்கைகள் கொண்ட யூட்டிலிட்டி வாகனமாக விளங்கும். 2016 இறுதி அல்லது 2017 தொடக்கத்தில் விற்பனைக்கு வரலாம்.

டாடா எக்ஸ்107

டாடா எக்ஸ்107 என்ற பெயரில் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவியை தயாரிக்க உள்ளனர். இது ஸெஸ்ட் காரின் நளத்தில் உருவாக உள்ளது.

டாடா க்யூ501 மற்றும் க்யூ502

க்யூ501 மற்றும் க்யூ502 எஸ்யூவி கார்கள் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட உள்ள பிரிமியம் எஸ்யூவி ஆகும். இவை 2017 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரலாம்.

புதிய மாடல்களை டாடா அடுத்தடுத்து களமிறக்கினாலும் மஹிந்திரா நிறுவனத்துடன் மிக கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.

Exit mobile version