டாடா இம்பேக்ட் டிசைன் மொழி அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் பயணிகள் கார்களை வடிவமைக்க புதிய டாடா இம்பேக்ட் டிசைன் மொழி தாத்பரியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்பேக்ட் டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாடல் டாடா ஸீகா ஆகும்.

டாடா இம்பேக்ட் டிசைன்

வரும் 20ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள டாடா ஸீகா காரே முதல் மாடலாக இந்த டிசைனால் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரவுள்ள அனைத்து டாடா கார்களும் இதே டிசைன் அடிப்படையில் உருவாக்கப்படும்.

டாடா காரை முதல்முறையாக பார்க்கும் பொழுது 20 விநாடிகளில் அந்த கார் பார்ப்பவருக்கு பிடித்து போகும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இம்பேக்ட் டிசைன் மொழி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விநாடி மட்டுமல்லாமல் எப்பொழுது பார்த்தாலும் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் காராக இருக்க வேண்டிய இம்பேக்ட் டிசைன் மொழி என்ற பெயரினை வைத்துள்ளதாக டாடா டிசைன் தலைவர் திரு.பிரதாப் போஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் டாடா மோட்டார்ஸ் கூறுகையில் இம்பேக்ட் டிசைன் மிக சிறப்பானதாக , உட்புற இன்டிரியர் கேபின் , வாகனத்தின் தோற்றம் , வீல்களின் இடம் போன்றவற்றுடன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான டிசைன் மொழியாகவும் , ஹூயூமானிட்டி கோடுகள் , சிலிங்ஷாட் கோடுகள் மற்றும் டைனமன்ட் வின்டோஸ் பெற்றிருக்கும்.

டாடா ஸீகா

உட்புறத்தில் ஓட்டுநருக்கு சிறப்பான ஸ்போர்ட்டிவ் லேஅவுட் ,  லேயர் காக்பிட் டிசைன் , தரமான மெட்டிரியல் மற்றும் சிறப்பான இடவசதி போன்றவற்றை பெற்றிருக்கும். டாடா மோட்டார்சின் வருங்கால மாடல்கள் அனைத்தும் இனி இதன் அடிப்படையிலே இருக்கும். முதல் மாடலாக டாடா ஸீகா ஹேட்ச்பேக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை ;

டாடா ஸீகா கார் விமர்சனம்

டாடா ஸீகா கார் படங்கள்

[envira-gallery id=”3889″]

Exit mobile version