Home Auto News

டாடா குழுமத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரி விலகல்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற டாடா சன்ஸ் குழுமத்தின் சேர்மேன் பதவிலியிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி தற்பொழுது டாடா குழுமத்தின் இயக்குநர் பதவியிலிருந்தும் விலகுவதாக மிஸ்த்ரி அறிவித்துள்ளார்.

டாடா குழுமங்களின் தலைவராக செயல்பட்டு வந்த சைரஸ் கடந்த அக்டோபர் 24ந் தேதி அதிரடியாக டாடா தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இடைக்கால டாடா நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பு ஏற்றுகொண்டார். வாகன துறையை தவிர மற்ற துறைகளில் மிகுந்த கவனம் செலுத்த வில்லை மேலும் ரத்தன் டாடாவின் கனவு கார் திட்டமான நானோ காரை நீக்க முயற்சித்ததாக பல்வேறு குற்றசாட்டுகளை சைரஸ் மீது டாடா சுமத்தியுள்ளார்.

வருகின்ற டிசம்பர் 22ந் தேதி நடைபெற உள்ள இயக்குநர் மற்றும் பங்குதாரர்கள் கூட்டத்தில் (extraordinary general meeting -EGM)  சைரஸ் மிஸ்த்ரியை நீக்குவதற்கு உண்டான தீர்மானத்தை நிறைவேற்ற டாடா சன்ஸ் போர்டு இயக்குநர்கள் செயல்பட்டு வருவதனால் தான் விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில் பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக சைரஸ் மிஸ்த்ரி குறிப்பிட்டுள்ளார்.

டாடா பயணிகள் பிரிவின் கீழாக சைரஸ் மிஸ்திரி செயல்படுத்திய மாடலான டியாகோ அமோக ஆதரவினை பெற்றுள்ளது. மேலும் வரவுள்ள மாடல்களான ஹெக்ஸா , கைட் 5 மற்றும் நெக்ஸான் போன்ற மாடல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா மோட்டார்ஸ் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

 

Exit mobile version