டாடா டிகோர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – updated

அடுத்த சில வாரங்களில் டாடா மோட்டார்சின் டாடா டிகோர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. டிகோர் செடான் ரக மாடலானது டியாகோ காரினை அடிப்படையாக கொண்டதாகும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக காட்சிக்கு வந்த  டிகோர் செடான் மாடல் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. டியாகோ காரின் பெரும்பாலான அம்சங்களை டிகோர் காரும் பெற்றிருக்கும்.

டாடா டிகோர் முக்கிய விபரங்கள்

1. டிசைன் 

இம்பேக்ட் டிசைன் வடிவ தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டியாகோ காரின் தோற்றத்திலே அமைந்திருக்கும் கைட் 5 மாடலில் கூடுதலாக பூட் மட்டும் இணைக்கப்பட்டிருக்கும்.

2. இன்டிரியர்

டியாகோ காரின் இன்டிரியர் அமைப்பினையே பெற்றிருக்கும் கைட்5யில் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கலாம்.இவற்றில் உள்ள வசதிகளில் முக்கியமானவை

3. எஞ்சின்

69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

4. ஏஎம்டி டிகோர்

டியாகோ காரில் அடுத்த சில மாதங்களில்ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதால் அதே போன்றே கைட்5 மாடலிலும் ஏஎம்டிஆப்ஷன் வரலாம் என எதிர்பார்கப்படுகின்றது.

5. போட்டியாளர்கள்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் , டிசையர் , அமேஸ் மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்திருக்கும்.

 

6. விலை

டிகோர் மாடல் விற்பனைக்கு ரூ.4.60 லட்சத்தில் தொடங்கலாம்.

7. புதிய பெயர்

கைட் 5 என்கின்ற குறியீடு பெயருக்கு மாற்றாக டிகோர் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Exit mobile version