டாடா ஜீக்கா கார் அறிமுகம்

0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டாடா ஜீக்கா ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  வரும் ஜனவரி 2016 யில் டாடா ஜீக்கா கார் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய  டாடா ஸீக்கா கார் ஹாரிஸன் நெஸ்ட் தளத்தில் இண்டிகா காரை அடிப்படையாக கொண்டதாகும்.Tata-Zica ஜீக்கா

இணையத்தில் டாடா ஜீக்கா காரின் படங்கள் வெளியானதை தொடர்ந்து அதிகார்வப்பூர்வமான படங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. டாடாவின் புதிய தேன்கூடு கிரிலுக்கு மத்தியில் டாடா லோகோ பதிக்கப்பபட்டுள்ளது. ஸெஸ்ட் மற்றும் போல்ட் கார்களை தொடர்ந்து அதே டிசைன் தாத்பரியத்தில் வரவுள்ள ஜீக்கா சிறப்பான தரத்தினை பெற்ற காராகவும் விளங்கும்.

Google News

டாடா ஸீக்கா

முகப்பில் சிறப்பான கிரிலுடன் நேர்த்தியாக அமைந்துள்ள முகப்பு விளக்குகளில் கருப்பு நிற கிளஸ்ட்டர் மற்றும் பனி விளக்குகள் அறையில் குரோம் பூச்சீனை பெற்று விளங்குகின்றது.  பக்கவாட்டில் உள்ள கோடுகள் சிறப்பாக அமைய பெற்றுள்ளது. தேலும் அலாய் வீல்கள் பொருத்தமாக அமைந்துள்ளது. பின்புற தோற்றமும் சிறப்பாக அமைந்துள்ளது. டாடா மோட்டார்சின் டிசைன் வடிவங்கள் உயர்வு பெற்றிருக்கின்றது. ஆனாலும் ஹூண்டாய் கார்களின் சாயலை தழுவியது போல உள்ளது.

 

Tata-Zica-interior-snapped-uncovered

உட்புறத்தில் பல நவீன அம்சங்களை பெற்ற காராக வரவுள்ள ஜீக்கா விளங்கும். இரட்டை வண்ண கலவை இன்டிரியருடன் இரண்டு பிரிவு கொண்ட  வட்ட வடிவ இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், பல் வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, பூளூடூத் , யூஎஸ்பி தொடர்புகளை பெற்று விளங்கும்.

முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை பேஸ் வேரியண்டினை தவிர்த்து மற்றவையில் இருக்கலாம்.

ஸீக்கா காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் புதிய டீசல் என்ஜின் ஆப்ஷனை பெற்றிருக்கும். மேலும் ஜீக்கா டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 25 கிமீ தொடலாம் என தெரிகின்றது.

 

Tata-Zica-rear

மேலும் தற்பொழுது வெளிவந்துள்ள கூடுதல் படங்களில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கருப்பு பம்பர் , கைப்பிடி , ஸ்டீல் வீல் கொண்ட மாடலும் வந்துள்ளது. டாடா இன்டிகா காருக்கு மாற்றாக ஜீக்கா நிலைநிறுத்தப்படலாம்.

டாடா ஜீக்கா காரின் போட்டியாளர்கள் ஹூண்டாய் ஐ10 , மாருதி செலிரியோ போன்ற கார்கள் விளங்கும் . வரும் ஜனவரி முதல் வாரத்தில் டாடா ஜீக்கா 3.75 லட்சத்தில் விற்பனைக்கு வரலாம்.

Tata Zica hatchback car images

பட உதவி ; encartor facebook , autosarena