டாடா டியாகோ கார் 50000 முன்பதிவுகளை கடந்தது

முந்தைய தவறுகளை நீக்கி புதிய வடிவ தாத்பரியங்கள் மற்றும் சிறப்பான கையாளுமையை வெளிப்படுத்தும் வாகனமாக தயாரிக்கப்பட்ட டாடா டியாகோ கார் சந்தையில் அமோக வரவேற்பினை பெற்று போட்டியாளர்களுக்கு மிகுந்த சவாலாக விளங்கி வருகின்றது.

சமீபத்தில் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் பிரிவு தலைவர் திரு. மயான்க் பாரீக் கூறுகையில்

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 6 ஏப்ரல் முதல் மாதந்தோறும் விற்பனை சராசரியாக 5000 என்கின்ற எண்ணிக்கையை கடந்த வருகின்றது. மேலும் இதுவரை 50,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ள டியாகோ காரின் குறிப்பிட்ட சில வேரியன்ட்களின் காத்திருப்பு காலம் நான்கு மாதங்களாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இம்பேக்ட் டிசைன் வடிவ மொழியில் உருவாக்கப்பட்டுள்ள டியாகோ மிக சிறப்பான இடவசதி, தரம் , சிறப்பான மைலேஜ் போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்களை மிக விரைவாக கவர்ந்துள்ளளது. டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.

69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டியாகோ காரை பற்றிய முழுவிபரம் தெரிந்துகொள்ள..

விரைவில் டியாகோ காரில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுதவிர டியாகோ ஸ்போர்ட் என்ற பெயரில் சக்திவாய்ந்த 120 hp இன்ஜின் பொருத்தப்பட்ட மாடலும் வெளியாக உள்ளது.

Share