டாடா டியாகோ கார் முன்பதிவு தொடக்கம்

0

ஸீகா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு டாடா டியாகோ கார் என பெயர் மாற்றப்பட்ட ஹேட்ச்பேக் கார் வரும் மார்ச் 28ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதால் ரூ.10,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

2016-Tata-Zica

Google News

ஸீகா வைரஸ் தாக்குதலால் தனது காரின் விற்பனை பாதிக்கும் என கருதிய டாடா காருக்கு புது பெயராக டியாகோ என மாற்றியது. இம்பேக்ட் டிசைன் தாத்பரியங்களுடன் டாடாவின் புதுப்பிகப்பட்ட பயணிகள் வாகன நுட்பத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள டியாகோ கார் சிறப்பான வரவேற்பினை பெறும் என டாடா மோட்டார்ஸ் நம்புகின்றது.

போல்ட் மற்றும் நானோ காருக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்ட உள்ள டியாகோ காரில் புதிய ரெவோடார்க் 1.05 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Tata-Zica-interior

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ; டாடா டியாகோ கார் விமர்சனம்

வருகின்ற மார்ச் 28, 2016 விற்பனைக்கு வரும் டியாகோ காரின் விலை ரூ. 4 முதல் 6 லட்சம் வரையிலான விலையில் அமையலாம். இதன் போட்டியாளர்களாக செலிரியோ , ஐ10 போன்றவை விளங்கும்.

[envira-gallery id=”3889″]