குறைந்த விலை டாடா நானோ காரின் அடிப்படையில் தொடக்கநிலை சந்தைக்கு ஏற்ற புதிய ஹேட்ச்பேக் காரினை டாடா மோட்டார்ஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. க்விட் , ஆல்ட்டோ 800 , ரெடி-கோ மற்றும் இயான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.
நானோ காரினை விட கூடுதல் நீளம் மற்றும் டியாகோ காரை விட குறைந்த நீளத்தில் டியாகோ காருக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ளது. க்விட் , ரெடி-கோ போன்ற கார்களை க்ராஸ்ஓவர் தாக்கத்தினை இந்த மாடலும் பெற்றிருக்கும்.
உலகின் விலை குறைந்த கார் என்ற பெருமைக்குரிய காரான டாடா நானோ பெரிதாக விற்பனையில் எடுபடவில்லை. மேலும் டாடாவின் ஸெஸ்ட் மற்றும் போல்ட் போன்ற கார்களும் பெரிதாக வரவேற்பினை பெறவில்லை. புதிதாக வரவுள்ள ஹேட்ச்பேக் கார் மிக சவாலான விலையில் நானோ காரின் பெட்ரோல் என்ஜினை பகிர்ந்துகொள்ளலாம் என தெரிகின்றது.
சில வாரங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வந்த டியாகோ கார் மற்றும் வரவுள்ள கைட் 5 செடான் போன்ற கார்கள் வடிவமைக்கப்பட்ட இம்பேக்ட் டிசைன் தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்த புதிய ஹேட்ச்பேக் கார் டாடா கைட்5 செடான் , நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி , ஹைக்ஸா க்ராஸ்ஓவர் எஸ்யூவி போன்ற கார்களின் வருகைக்கு பின்னர் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: Financial Express