டாடா நானோ பெலிகன் கார் சோதனை ஓட்டம்

டாடா நானோ காரின் அடிப்படையிலான நானோ பெலிகன் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. க்விட் ,ஆல்ட்டோ , இயான் போன்ற கார்களுக்கு போட்டியாக பெலிகன் அமையும்.

டாடா மோட்டார்சின் புதிய மாடலான டியாகோ காரின் வெற்றியை தொடர்ந்து டாடா ஜென்எக்ஸ் நானோ காரினை அடிப்படையாக கொண்ட நானோ பெலிகேன் மாடல் டியாகோ மற்றும் நானோ காருக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பெலிகன் என்ற குறியீட்டு பெயரில் சோதனை ஓட்டத்தினை தொடங்கியுள்ள புதிய மாடலில் நானோவின் தோற்ற பாரம்பரியத்தினை பெற்றிருந்தாலும் தோற்ற அமைப்பில் முற்றியிலும் மாறுபட்ட முகப்பினை பெற்றிருக்கும். மேலும் ஜென்எக்ஸ் நானோ காரில் உள்ள 624சிசி என்ஜினுக்கு மாற்றாக கூடுதல் ஆற்றல் மற்றும் சிசி கொண்ட என்ஜினை பெற்றிருக்கும்.

உட்புறத்தில் ஜென்எக்ஸ் நானோ காரின் தோற்றத்தினை விட மேம்பட்டதாகவும் டியாகோ காருக்கு இணையான இன்டிரியரை பெற்றிருக்கும். பல நவீன அம்சங்களை கொண்ட மாடலாக விளங்கும்.

ரத்தன் டாடா அவர்களின் கனவு காரான டாடா நானோ கார் ரூ.1 லட்சம் என்ற விலையில் உலகின் மலிவான விலை கொண்ட கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்தாலும் பெரிய அளவில் வெற்றியை பெறாமல் போனது. நானோ காரினை மேம்படுத்தி ஜென்எக்ஸ் நானோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட பொழுதும் சிறப்பான விற்பனை எட்டவில்லை என்றாலும் ஒரளவு விற்பனை எண்ணிக்கையை பெற்றது.

படங்கள் உதவி ; autocarindia

Exit mobile version