Automobile Tamilan

டாடா ஸீகா காரின் புதிய பெயர் விரைவில்

ஸீகா வைரஸ் தாக்குதலால் டாடா மோட்டார்சின் ஸீகா காரின் பெயரை டாடா மோட்டார்ஸ் மாற்ற முடிவெடுத்திருந்தது. அதன் அடிப்படையில் சிவ்யிட் , டியாகோ மற்றும் அடோர் என்ற மூன்று பெயர்களை இறுதிசெய்திருந்தது.

tata-zica

அதன் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த ஓட்டுளிப்பில் டாடா மோட்டார்ஸ் ஸீகா காரின் புதிய பெயரை இறுதி செய்துவிட்டதை உறுதிசெய்துள்ளது. எனவே அடுத்த சில நாட்களில் ஸீகா காரின் புதிய பெயரை அறிவிக்க உள்ளது. பயணிகள் கார் விற்பனையை சந்தையை புதுப்பிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட போல் , ஸெஸ்ட் போன்ற கார்கள் பெரிய பயனை தராத நிலையில் தற்பொழுது ஜிகா , கைட் 5 , நெக்ஸான் மற்றும் ஹெக்ஸா போன்ற மாடல்களை டாடா பெரிதும் நம்பி இருக்கின்றது.

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8 bhp மற்றும் டார்க் 114N m ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

கடந்த அரை மணி நேரத்திற்கு முன்னதாக இந்த மூன்று பெயர்களுக்கான ஓட்டளிப்பு முடிந்து விட்டதாகவும் அடுத்த சில நாட்களில் புதிய பெயர் மற்றும் அடுத்த சில மாதங்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளதை டாடா மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது.

Exit mobile version