வரும் ஜனவரி 20ந் தேதி டாடா ஸீகா கார் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஸீகா காரும் ஒன்றாகும்.
டாடா ஸீகா கார்டாடா மோட்டார்சின் புதிய ஸீகா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரும்பொழுதோ அல்லது தாமதமாகவோ விற்பனைக்கு வரும்.
1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் ஆற்றல் 69 bhp மற்றும் 140 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. சிட்டி மற்றும் இக்கோ என இருவிதமான டிரைவிங் மோட் ஆப்ஷனை கொண்டுள்ளது.
1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 83.8 bhp மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. சிட்டி மற்றும் இக்கோ என இருவிதமான டிரைவிங் மோட் ஆப்ஷனை கொண்டுள்ளது.
மாருதி செலிரியோ காருக்கு நேரடியான சவாலாகவும் , ஐ10 , வேகன்ஆர் போன்ற மாடல்களுக்கும் சவாலாக ஜீக்கா கார் விளங்கும். டாடா ஸீக்கா கார் விலை ரூ. 3.90 லட்சம் முதல் 5.80 லட்சத்திற்குள் அமைய பெறலாம்.
வரும் ஜனவரி 20, 2015 விற்பனைக்கு வரும் ஸீகா காரினை தொடர்ந்து டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸீக்கா காரினை அடிப்படையாக கொண்ட செடான் காரும் பார்வைக்கு வரவுள்ளது. ஸீகா செடான் கார் ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க ; டாடா ஸீகா கார் முழுவிபரம்
டாடா ஸீகா கார் படங்கள்
[envira-gallery id=”3889″]