டாடா X451 பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் எதிர்கால டாடா கார்கள் விபரம்

ஹூண்டாய் ஐ20 மற்றும் மாருதி பலேனோ போன்ற பிரிமியம் கார்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலான பிரிமியம் ஹேட்ச்பேக் காரை டாடா  X451 என்ற குறியீடு பெயரில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

tata-hexa-suv

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவில் மிகச்சிறப்பான வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் டாடா நிறுவனம் தன்னுடைய புதிய மாடல்களின் வடிவம் , நுட்பம் , தரம் போன்றவற்றில் மிகுந்த முக்கிய கவனத்தினை செலுத்தி வருகின்றது. தொடக்கநிலை முதல் பிரிமியம் சந்தை வரை உள்ள அனைத்து மாடல்களுக்கு போட்டியாக டாடா மோட்டார்சின் கார்களை களமிறக்க உள்ளது.

டாடா மோட்டார்ஸ் எதிர்கால கார்கள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் பல புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் சந்தைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவை டியாகோ காரை அடிப்படையாக கொண்ட கைட் 5 செடான் கார் , காம்பேக்ட் ரக எஸ்யுவி பிரிவில் டாடா நெக்ஸான் . எம்பிவி ரக கார் மாடல்களில் இன்னோவா காருக்கு போட்டியாக ஹெக்ஸா என்ற பெயரிலான க்ராஸ்ஓவர் ரக எம்பிவி , மேலும் பலேனோ மற்றும் ஐ 20 பிரிமியம் கார்களுக்கு போட்டியாக டாடா X451 , இதுதவிர சுமோ மற்றும் மூவஸ் போன்ற எம்பிவி கார்களுக்கு மாற்றாக X601 மற்றும் X602 என்ற குறியீடு பெயரிலான கார்கள் மற்றும் ஃபார்ச்சூனர் , பஜெரோ போன்ற கார்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலான Q501 மற்றும் Q502 என்ற குறியீடு பெயரிலான பிரிமியம் எஸ்யூவி கார்களை தயாரிக்க உள்ளது.

Tata-X451-Premium-Hatchback

image:overdrive.in

மேலும் டாடா நானோ காரின் அடிப்படையில் நானோ எலக்ட்ரிக் கார் மற்றும் க்விட் , ஆல்ட்டோ 800 காருக்கு போட்டியாக நானோ பெலிகன் போன்ற மாடல்கள் அடுத்த மூன்று வருங்களில் அதாவது 2017 முதல் 2020க்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய டாடா கார்கள் அனைத்தும் இந்தியா , பிரிட்டன் மற்றும் இத்தாலி போன்ற இடங்களில் உள்ள டாடா டிசைன் ஸ்டூடியோ நிறுவனங்களால் வடிவமைக்கப்பட உள்ளது.

 

tata-kite5