Automobile Tamil

டாப் 5 ஃபேர்வெல் பைக்குகள் 2015

2015 ஆம் ஆண்டில் சந்தையை விட்டு வெளியேறிய சில முக்கியமான டாப் 5 பைக்குகள் 2015 பற்றி இந்த பகிர்வில் தெரிந்துகொள்ளலாம். இவற்றில் சில பைக்குகள் இனி திரும்ப வராது ஒருசில புதிய மாற்றங்களுடன் மீண்டும் வர வாய்ப்புகள் உள்ளன.

hero-karizma-zmr

ஹீரோ கரிஸ்மா

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹீரோ கரிஸ்மா மற்றும் ZMR பைக்குகள் 2015 ஆம் ஆண்டில் விடைபெற்றுள்ளது. கரிஸ்மா பைக்கில் 20பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 223சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. கரிஷ்மா பைக் முற்றிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தாலும். புதிய 200சிசி பைக்கினை ஹீரோ நிறுவனம் உருவாக்கி வருகின்றது. ஆனால் அது கரிஸ்மா பிராண்டில் வர வாய்ப்புகள் குறைவுதான்

மேலும் படிக்க ; 3 புதிய பைக்குள் ஹீரோ 2016

2. பஜாஜ் பல்சர் 200NS

மிகவும் பிரசத்தி பெற்ற பல்சர் வரிசையில் விற்பனையில் இருந்த பல்சர் 200என்எஸ் பைக் சந்தையை விட்டு வெளியேறியுள்ளது. புதிய பல்சர் 200 ஏஎஸ் மற்றும் ஆர்எஸ் 200 வருகைக்கு பின்னர் விற்பனை நிறுத்தப்பட்டிருக்கின்றது. புதிய பல்சர் 200NS பைக் வரும் ஜூலை மத்தியில் எஃப்ஐ என்ஜினுடன் வரலாம்.

மேலும் படிக்க ; பல்சர் 200NS FI பைக் வருகை ?

3. ஹோண்டா ஸ்டன்னர்

ஹோண்டாவின் ஸ்டன்னர் மிக சிறப்பான மாடலாக ஆஃப் ஃபேரிங் செய்யப்படிருந்த ஸ்டன்னர் மாடல் புதிய ஷைன் எஸ்பி வரவால் 125சிசி பைக் பிரிவில் இருந்து ஸ்ட்ன்னர் வெளியேறியுள்ளது.

மேலும் படிக்க:  ஹோண்டா சிபி ஷைன் SP பைக்

4. சுசூகி இன்சூமா

சுசூகி நிறுவனத்தின் 250சிசி இன்சூமா பைக் மிக உயர்ந்த விலையில் அதாவது 2.20 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. மிக மோசமான விற்பனையின் காரணமாக சந்தையை விட்டு முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது.

மேலும் படிக்க ; சுசூகி ஜிக்ஸெர் 250 பைக் வருகை ?

5. ஹோண்டா டிவிஸ்ட்டர்

மிக சிறப்பான டிவிஸ்ட்டர் பைக்கும் 2015 ஆம் ஆண்டில் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. மிக சிறப்பான மாடலாக இருந்து வந்த ஹோண்டா டிவிஸ்ட்டர் பைக்கிற்கு மாற்றாக ஹோண்டா லிவோ களமிறங்கியுள்ளது.

மேலும் படிக்க ; ஹோண்டா லிவோ பைக்

 

இந்த 5 பைக்குகளில் உங்கள் விருப்பமான பைக் எது ? எந்த பைக் மிஸ் பன்ன போறிங்க.. என்னோட சாய்ஸ் கரிஸ்மா … உங்களுடையது எது கமென்ட் பன்னுங்க… ஃபேஸ்புக் கமென்டல கீழே இருக்கு பாருங்க…

Exit mobile version