டாப் 5 சூப்பர் ஹிட் பைக்குகள் – 2015

0

கடந்த 2015 ஆம் ஆண்டில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற டாப் 5 புதிய பைக்குகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். சூப்பர் ஹிட் பைக்குகள் அனைத்தும் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் வாசகர்களின் பார்வைகளின் படி தொகுக்கப்பட்டுள்ளது.

bajaj-pulsar-rs200

Google News
  1. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200

மிகவும் நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் அம்சங்களுடன் முழுதும் ஃபேரிங் செய்யப்பட்டு சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜினுடன் வெளிவந்த பல்சர் ஆர்எஸ்200 பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

24.5 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 200சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.6 என்எம் ஆகும்.

2. மஹிந்திரா மோஜோ

5 ஆண்டுகளுக்கு மேலாக சோதனை ஓட்டத்தில் இருந்து வந்த மோஜோ முதற்கட்டமாக 4 மாநகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தாலும் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரலாம்.

27பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 295சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30என்எம் ஆகும்.

mahindra-mojo (2)

3. யமஹா ஆர்3

இந்தியாவின் சிறந்த பைக் 2016 விருதினை வென்றுள்ள யமஹா ஆர்3 பைக் முழுதும் ஃபேரிங் செய்யப்பட்டு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மிகவும் அசத்தலான பைக்காகும்.

42பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 321சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 29.6என்எம் ஆகும்.

Yamaha YZF R3

4. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர்

150 முதல் 160சிசி வரையிலான பிரிவில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தகூடிய பைக்காக விற்பனைக்கு வந்த ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் ஆப்ஸ் ஒன்றை ஹார்நெட் 160R பைக்கிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

15.7பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 163சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14.76என்எம் ஆகும்.

honda cb hornet 160r bike view

5. பஜாஜ் அவென்ஜர்

மூன்று வேரியண்டில் விற்பனைக்கு வந்த க்ரூஸர் ரக அவென்ஜர் மாடல் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. ஸ்டீரிட் மற்றும் க்ரூஸ் , 150சிசி மற்றும் 220சிசி என்ஜின் ஆகியவற்றில் கிடைக்கின்றது.

14.54பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.5என்எம் ஆகும்.

19.03பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 17.5என்எம் ஆகும்.

bajaj-avenger