2015ம் ஆண்டில் பல புதிய கார்கள் விற்பனைக்கு வந்திருந்தது அவற்றில் சில கார்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. டாப் 5 தோல்வி கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
5. மாருதி சுசூகி எஸ் க்ராஸ்
மாருதி எஸ் க்ராஸ் கிராஸ்ஓவர் ரக கார் மாடலாக நெக்ஸா டீலர் வழியாக விற்பனைக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த எஸ் க்ராஸ் எதிர்பார்க்கப்பட்ட விற்பனையை எட்டாமல் பின் தங்கி உள்ளது.
இரண்டு 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரு டீசல் என்ஜின் ஆப்ஷன் இருந்தாலும் பிரிமியம் மாடலாக நெக்ஸா வழியாக வந்த எஸ் க்ராஸ் விற்பனைக்கு வந்த சில மாதங்களிலே அதிகப்படியாக 1 லட்சம் வரை சலுகை மற்றும் சிறப்பு பதிப்பு போன்றவை பெற்றுள்ளது. மாதம் 2500 கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் மிகவும் எதிர்பார்கப்பட்ட எஸ் க்ராஸ் தோல்வி கார்களில் 5 வது இடத்தில் உள்ளது.
4. ஹூண்டாய் வெர்னா 4S
புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா 4s வருகைக்கு பின்னர் ஹேண்டா சிட்டி டீசல் வருகையால் பெரிதும் விற்பனை பாதிக்கப்பட்டிருக்கும் மாடலில் வெர்னா காரும் ஒன்றாகும். 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் , 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷன் இருந்தாலும் போட்டியார்களுடன் ஈடுகட்ட முடியாமல் டாப் 5 தோல்வி கார்களில் 4வது இடத்தில் உள்ளது.
3. டட்சன் கோ +
டட்சன் பிராண்டில் விற்பனைக்கு வந்த டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி மாடல் மிக குறைவான விலையில் சிறப்பான இடவசதி கொண்ட மாடலாக இருந்தாலும் கோ காரின் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பாதுகாப்பற்ற கார் என்ற பெயருடன் தோல்வி அடைந்தது.
2. டாடா போல்ட்
டாடா ஸெஸ்ட் காரின் ஹேட்ச்பேக் மாடலான போல்ட் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி மாடல்களில் ஒன்றாகும். மிகவும் நேரத்தியான மாடலாக இருந்தாலும் டாடா ஸெஸ்ட் மற்றும் போல்ட் இரண்டுமே பெரிய விற்பனை எண்ணிக்கை பதிவு செய்ய தவறிவிட்டது.
1.ரெனோ லாட்ஜி
2015ம் வருடத்தின் தோல்வி கார் மற்றும் வெற்றி கார் என இரண்டினை கொடுத்த பெருமை நிச்சியமாக ரெனோ நிறுவனத்தை சேரும். எம்பிவி சந்தையில் முதன்மை வகிக்கும் இன்னோவா போன்ற போட்டியார்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் மாடலாக டஸ்ட்டர் காரினை தொடர்ந்து ரெனோ நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் மாடலாக எதிர்பார்க்கப்பட்ட லாட்ஜி தோல்வி அடைந்தது.
ஆனாலும் ரெனோ வெற்றி பெற்று விட்டது எவ்வாறு ? ரெனோ வெற்றி கார் எது தெரிந்தால் கமென்ட் பன்னுங்க… டாப் 10 ஹிட் கார்கள் பதிவில் சந்திப்போம்.