Automobile Tamil

டியாகோ கார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா டியாகோ கார் ரூ.3.30 லட்சம் தொடக்க விலையில் மிக சிறப்பான வடிவம் , பல நவீன வசதிகளுடன் மிகவும் சவாலான விலையில் சிறப்பான மாடலாக அமைந்துள்ளது.

tata-tiago

டாடாவின் பயணிகள் கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனைக்கு வந்த போல்ட் மற்றும் ஸெஸ்ட் போன்ற மாடல்கள் எதிர்பார்த்த விற்பனையை எட்ட தவறிய நிலையில் போல்ட் காருக்கு கீழாக நிலைநிறுத்தப்பட்டுள்ள டியாகோ காரில் உள்ள வசதிகள் என்ன தெரிந்துகொள்வோம்.

  1.  இன்டிகா காரின் தோற்றத்தினை தழுவியே நவீன வடிவ தாத்பரியங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள டியாகோ காரில் டாடா மோட்டார்சின் புதிய இம்பேக்ட் டிசைன் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.
  2. இம்பேக்ட் டிசைன் மொழியில் வரவுள்ள வாகனங்கள் மிக விரைவாக வாடிக்கயாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான டிசைன் என்பதனால் டியாகோ மாடலும் பலரை கவர்ந்துள்ளது.
  3. தோற்றம் மட்டுமல்லாமல் உட்புறத்திலும் சிறப்பான ஃபிட் மற்றும் ஃபீனிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.
  4. போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பொருத்தப்பட்டிருந்த ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
  5.  புத்தம் புதிய 70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
  6. டாடா டியாகோ டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.28 கிமீ மற்றும் டியாகோ பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 23.84 கிமீ ஆகும்.
  7. XB, XE, XM, XT மற்றும் XZ என மொத்தம் 5 விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.
  8. XB பேஸ் வேரியண்டினை தவிர்த்து  XE, XM மற்றும் XT போன்ற வேரியண்ட்களில் ரூ.18000 கூடுதலாக செலுத்தி முன்பக்க இருகாற்றுப்பைகள் , ஓட்டுனர் இருக்கை உயரம் செய்ய , இருக்கை பட்டை நினைவுப்படுத்துதல் போன்றவற்றை பெற இயலும்.
  9. ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் . யூஎஸ்பி ஆக்ஸ் , பூளூடூத் ,  ஜூக் கார் ஆப் போன்றவற்றை பெற்றுள்ளது.
  10. டாப் வேரியண்டில் அனைத்து வசதிகளுடன் ஏபிஎஸ் , இபிடி இணைக்கபட்டுள்ளது.
  11.  மாருதி செலிரியோ , ஐ10 மற்றும் பீட் போன்ற கார்களுடன் போட்டியிடுகின்றது.
  12. இந்தியாவின் விலை குறைந்த டீசல் காராக டாடா டியாகோ விளங்குகின்றது.

மேலும் படிங்க ; டாடா டியாகோ கார் விலை பட்டியல்

Exit mobile version