டியூவி300 எஸ்யூவி எம்ஹாக்100 என்ஜினில் அறிமுகம்

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காரில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய நூவோஸ்போர்ட்  எஸ்யூவி காரின் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் டாப் வேரியண்டில் மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்சில் கிடைக்கும்.

டியூவி300 எஸ்யூவி காரில் எம்ஹாக்80 என்ஜின் பொருத்தப்பட்ட மாடலில் 84 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 240Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த குவான்ட்டோ காரின் மேம்ம்படுத்தப்பட்ட மாடலான நூவோஸ்போர்ட் எஸ்யூவி காரில் அதே 1.5 லிட்டர் என்ஜினை ஆற்றலை அதிகரித்து 100 bhp என்ஜினாக மாற்றி எம் ஹாக்100 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

102 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.04 கிமீ ஆகும்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிறைகுறைகளின் அடிப்படையிலே இந்த கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் டியூவி30டி0 எஸ்யூவி டாப் வேரியண்டில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

டியூவி300 எம்ஹாக்100 விலை பட்டியல்

T8 – ரூ.9.19 லட்சம்

T8 AMT – ரூ. 9.89 லட்சம்

{ அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை }

Exit mobile version