டிரையம்ஃப் போனிவில் பைக் வாங்க எளிய கடன் திட்டம்

0
டிரையம்ஃப் போனிவில் பைக் வாங்குவதற்க்கு எளிய மாத தவணையில் புதிய கடன் திட்டத்தை டிரையம்ஃப்  மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்துள்ளது.

கிளாசிக் தோற்றத்தில் நவீன அம்சங்களுடன் விளங்கும் போனிவில் பைக் மிக அதிகப்படியான விசிறிகள் மற்றும் வாடிக்கையாளர்களை கொண்ட டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் மாடலாகும்.

டிரையம்ஃப் போனிவில் பைக்

59.84 பிஎச்பி ஆற்றலை தரவல்ல 865சிசி இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 61என்எம் ஆகும். 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Google News

போனிவில் பைக்கின் விலை ரூ.5.99 லட்சம் (Ex-showroom Delhi)

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைந்து இந்த சிறப்பு கடன் திட்டத்தை டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் முன்பனமாக ரூ.2.35 லட்சத்தை செலுத்தி மாத தவணையாக ரூ.9, 999 5ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டிரையம்ஃப் நிறுவனத்தின் பைக்குகளில் விலை குறைவான பைக்காக போனிவில் திகழ்கின்றது. இந்தியாவில் 18 மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்கள் 1600 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.