டெர்ரா ஆர்6 எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா அறிமுகம்

0
ஜப்பானை சேர்ந்த டெர்ரா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மூன்று சக்கர எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை அறிமுகம் செய்துள்ளது.டெர்ரா ஆர்6 ஆட்டோரிக்ஷா 1+6 என மொத்தம் 7 நபர்கள் பயணிக்க முடியும்.
Terra R6 Electric 3-Wheeler

ஆர்6 எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 100கிமீ வரை பயணிக்கலாம். இதன் மொத்த எடை 278 கிலோ ஆகும் இதன் பேட்டரியின் எடை 150கிலோ ஆகும். 48V 100Ah பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

டெர்ரா ஆர்6  நீளம் 2950மிமீ அகலம் 1090மிமீ மற்றும் 1800மிமீ ஆகும். ட்ரம் பிரேக் பொருத்தியுள்ளனர். வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வர உள்ள டெர்ரா ஆர்6 ஆட்டோரிக்ஷா சிறந்த வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கலாம்.