டெர்ரா மோட்டார்ஸ் 80 டீலர்களை திறக்கின்றது

டெர்ரா எலக்ட்ரிக் மோட்டார் நிறுவனம் நாடு முழுதும் பல்வேறு இடங்களில் முதற்கட்டமாக 80 டீலர்களை திறக்க திட்டமிட்டுள்ளனர். டெர்ரா மோட்டார்ஸ் கிவாமி எலக்ட்ரிக் பைக் விற்பனை செய்து வருகின்றது. மேலும் R6 எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாவை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
டெர்ரா மோட்டார்ஸ்

ரூ.31 கோடி முதலீட்டில் குர்கான் அருகில் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகின்றது. தற்பொழுது நாடு முழுவதும் டீலர்களை நியமித்து வருகின்றது.

எங்களுடைய எலக்ட்ரிக் ஆட்டோரிக்ஷா மிக சிறப்பான செயல்திறன் மற்றும் தரத்தினை கொண்டிருக்கும். விற்பனைக்கு பின்னும் வாடிக்கையாளர் சேவையை சிறப்பாக வழங்க உள்ளோம் என டெர்ரா மோட்டார்ஸ் இந்திய பிரிவு தலைவர் டெப்பி செகி தெரிவித்துள்ளார்.

கிவாமி எலக்ட்ரிக் பைக் விலை ரூ.18 லட்சமாகும்.

Terra Motors India to open 80 dealership across the country

Exit mobile version