முன்னே சென்ற 2 கார்களின் விபத்தை கணித்த டெஸ்லா ஆட்டோபைலட் – வீடியோ

மிக வேகமாக வளர்ந்து வரும் தானியங்கி கார் நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் டெஸ்லா ஆட்டோபைலட் சிஸ்டம் முன்னே சென்ற கார்களின் விபத்தை கணித்து எச்சரிக்கை ஒலியை எழுப்பிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் இடம்பெற்றுள்ள ஆட்டோபைலட் எனப்படும் தானியங்கி முறையில் காரினை இயக்க உதவும் அமைப்பானது விபத்தினை ரேடார் வசதியுடன் முன்கூட்டியே உணர்ந்து அதற்கு ஏற்ப எச்சரிக்கை ஒலியை எழுப்பும் வகையில் அல்லது தானியங்கி முறையில் நம் தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ள முடியும்.

நெதர்லாந்து நாட்டின் A2 நெடுஞ்சாலையில் டெஸ்லா காருக்கு முன்னதாக பயணித்து கொண்டிருந்த இரு கார்கள் மோதுவதனை முன்கூட்டிய எச்சரித்து பீப் ஒலியை எழுப்பிய அடுத்த சில விநாடிகளில் இருகார்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டெஸ்லா மாடல் எஸ் ஆட்டோபைலட் சிஸ்டத்தில் உள்ள ரேடார் சென்சார்கள் உதவியுடன் இதனை உணர்ந்துள்ளது.

வீடியோ இணைப்பு

 

//platform.twitter.com/widgets.js

இந்த விபத்தில் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா காருக்கு முன்னனால் சென்ற சிவப்பு நிற ஹேட்ச்பேக் கார் முன்னே சென்ற எஸ்யூவி காரின் மீது மோத உள்ளதை மிக தெளிவாக இந்த ரேடார் கணித்துள்ளது. இனி எதிர்கால ஆட்டோமொபைல் வரலாறு நிச்சியமாக பாதுகாப்பானதாக அமையும் என்ற நம்பிக்கை டெஸ்லா ஆட்டோபைலட் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2016ல் டெஸ்லா வெளியிட்டுள்ள மேம்பட்ட ஆட்டோபைலட் பதிப்பில் ரேடார் உதவியுடன் மிக சிறப்பாக சாலையை கணித்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெஸ்லா ஆட்டோபைலட் வீடியோ

[vimeo 192179726 w=640 h=360]

Exit mobile version