Automobile Tamil

டைய்ம்லர் இந்தியா பேருந்து உற்பத்திக்கு தயார்

டைய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன பிரிவில் பேருந்து உற்பத்தியை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக அடிச்சட்டத்தினை சென்னை ஆலையில் இருந்து எகிப்துக்கு ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.

டைய்ம்லர் ஏஜி ஜெர்மனியை தலைமையாக கொண்டு செயல்படும் டைய்ம்லர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் வர்த்தக வாகனங்களை பாரத் பென்ஸ் பிராண்டில் விற்பனை செய்து வருகின்றது. மேலும் பேருந்து உற்பத்திக்கான ஆலையை கட்டமைத்து வருகின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ்

முதன்முறையாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அடிச்சட்டத்தினை எகிப்து நாட்டின் மேனிஃபெக்ட்சரிங்  வர்த்தக வாகன (MCV-Manufacturing Commercial Vehicles) நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது.

மேலும் வரும் இரண்டாம் காலாண்டு முதல் ஒரகடம் ஆலையில் பாரத் பென்ஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் பெயரில் பேருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்க உள்ளது.

முதற்கட்டமாக ஆண்டுக்கு 1500 பேருந்துகளும் முழுமையான உற்பத்தியை எட்டும்பொழுது ஆண்டுக்கு 4000 பேருந்துகள் வரை தயாரிக்கும் வகையில் டைய்ம்லர் ஆலை வடிவமைத்துள்ளனர்.

Exit mobile version