டொயோட்டா மோட்டார் கார்பரேஷனின் அங்கமான டைஹட்சூ பட்ஜெட் பிராண்டில் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. வருகின்ற 2019 ஆம் ஆண்டுக்கு முன்னதாக டைஹட்சூ இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நிசான் நிறுவனத்தின் டட்சன் பிராண்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான கியா மோட்டார்ஸ் போன்று டொயோட்டா நிறுவனத்தின் தொடக்கநிலை சந்தைகளுக்கு ஏற்ற மாடலாக டைகட்சூ பிராண்டில் இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ள மாடல்களை அடிப்படையாக கொண்டவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டு வருகின்றது.
டைஹட்சூ பிராண்டில் டட்சன் கோ+ எம்பிவி காருக்கு போட்டியாக டைகட்சூ சிகாரா எம்பிவி மாடல் உள்ளது. இதனை முதல் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. பட்ஜெட் பிராண்டு என்பதனால் பெரும்பாலான பாகங்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படும் என்பதனால் மிகுந்த சவாலான விலையில் மாருதி சுஸூகி , ஹூண்டாய் , டட்சன் போன்ற நிறுவனங்களுக்கு சவாலாக அமையலாம். டொயோட்டா டீலர்கள் வாயிலாக கார்களை டைகட்சூ விற்பனை செய்யலாம்.
ரூ.5 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட மாடல்களை இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்யாத நிலையில் அவற்றை ஈடுக்கட்டும் நோக்கில் தனது பட்ஜெட் பிராண்டிலோ அல்லது டொயோட்டா பிராண்டிலோ தொடக்கநிலை மாடல்களை அறிமுகம் செய்வதற்கான திட்டத்தை ஆராய்ந்து வருவதனால் அடுத்த சில மாதங்களில் முறையான அறிவிப்பு வெளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எட்டியோஸ் ,லிவா கார்களை விட குறைவான விலையில் அமைந்திருந்தாலும் தரமானதாக டொயோட்டாவின் தரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைந்திருக்கும்.
டொயோட்டா மாடல்களான இன்னோவா க்ரீஸ்ட்டா , ஃபார்ச்சூனர் , கரோல்லா , கேம்ரி , லேண்ட் க்ரூஸர் பிராடோ மற்றும் லேண்ட் க்ரூஸர் போன்ற மாடல்கள் பிரிமியம் சந்தையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் எட்டியோஸ் ,லிவோ போன்றவை மட்டுமே தொடக்கநிலை சந்தையில் உள்ளது.
லெக்சஸ் பிராண்டு
மேலும் டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் கார்களும் பெங்களூருவில் ஆலையில் தயாரிக்க உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களில் லெக்சஸ் பிராண்டில் கார்கள் வரவுள்ளது. லெக்சஸ் ES 300h மாடல் ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய மாடலாகும்.