டொயோட்டா இனோவா க்ரிஸ்டா பெட்ரோல் விபரம் வெளியானது

0

புதிய தலைமுறை டொயோட்டா இனோவா க்ரிஸ்டா காரின் பெட்ரோல் வேரியண்ட் மாடலில் விபரங்கள் வெளியாகியுள்ளது. இனோவா க்ரிஸ்டா வருகின்ற ஆகஸ்ட மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

toyota-innova-crysta

Google News

இனோவா காரின் இரண்டாம் தலைமுறை மாடலான இனோவா க்ரிஸ்டா இருவிதமான டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற மாடலுகளுடன் ரூ.14.13 லட்சம் முதல் ரூ.21.17 லட்சம் வரையிலான விலையில் உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பயன்பாட்டில் உள்ள 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜினை இன்னோவா க்ரிஸ்டா பெற்றிருக்கும். 166 hp ஆற்றல் வெளிப்படுத்தும் 2.7லி டியூவல் VVT-i இஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 245 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இரு கியர்பாக்ஸ் பெற்றிருக்கலாம்.

toyota-innova-crysta-7-airbags

இனோவா க்ரிஸ்டா பெட்ரோல் வேரியண்ட் விபரம்

தொடக்கநிலை இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் G வகை

 • 7 அல்லது 8 இருக்கை ஆப்ஷன்
 • 5 வேக மெனுவல் அல்லது 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ்
 • 16 இஞ்ச் அலாய் வீல் டயர் 205/65R 16
 • அடிப்படை தகவல்களை வழங்கும் டிஸ்பிளே
 • மூன்று காற்றுப்பைகள்
 • தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இல்லை

இன்னோவா க்ரிஸ்ட்டா பெட்ரோல் V வகை

 • 7  இருக்கை ஆப்ஷன்
 • 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ்
 • 16 இஞ்ச் அலாய் வீல் டயர் 205/65R 16
 • அடிப்படை தகவல்களை வழங்கும் டிஸ்பிளே
 • மூன்று காற்றுப்பைகள்
 • தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • தானியங்கி எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு
 • தானியங்கி வின்டோஸ் கண்ணாடி மேல் கீழ் இயங்கும் வசதி
 • கீலெஸ் என்ட்ரி மற்றும்  கோ
 • முன்பக்க பனி விளக்குகள்

இனோவா க்ரிஸ்ட்டா Z வேரியண்ட்

 • 7  இருக்கை ஆப்ஷன்
 • 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ்
 • 17 இஞ்ச் அலாய் வீல் டயர் 215/55R 17
 • க்ருஸ் கன்ட்ரோல்
 •  7 காற்றுப்பைகள்
 • தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
 • தானியங்கி எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்கு
 • லெதர் இருக்கைகள்

இனோவா க்ரிஸ்டா பெட்ரோல் விலை விபரம்

டீசல் மாடலின் தொடக்க விலையை விட ரூ.60,000 வரை குறைவான விலையில் டொயோட்டா இனோவா க்ரிஸ்டா பெட்ரோல் கார் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது டீலர்கள் வாயிலாக ரூ.50,000 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்னோவா பெட்ரோல் கார்கள் டெலிவரி ஆகஸ்ட் இறுதியில் தொடங்கலாம்.