இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் மேம்படுத்தப்பட்ட டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. எட்டியோஸ் பிளாட்டினம் மாடல் பிரேசில் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
எட்டியோஸ் செடான் மற்றும் எட்டியோஸ் லிவோ என இருமாடல்களும் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் இருமாடல்களும் இந்த வருடத்தின் இறுதிக்குள் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சமீபத்தில் எட்டியோஸ் கார் சோதனை ஓட்ட படங்கள் வெளியாகியுள்ளது.
தோற்ற அமைப்பில் இரு மாடல்களும் முன்பக்கத்தில் ஸ்போர்ட்டிவ் வகை பம்பர் ,அலாய் வீல் பின்பக்க பம்பரை பெற்றுள்ளது. ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு புதிய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , புதிய இருக்கைகள் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , க்ரூஸ் கன்ட்ரோல் ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்டு இருக்கை , மூன்று பாயின்ட் இருக்கை பட்டை போன்ற ஆப்ஷன்களை பெற்றிருக்கும்.
இந்தியாவில் எட்டியோஸ் லிவோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பெற்றுள்ளது. எட்டியோஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் பெற்றுள்ளது. இதே இஞ்ஜின் ஆப்ஷனுடன் புதிய மாடல்களும் விளங்கும் ஆற்றலில் எந்த மாற்றங்கள் இருக்காது என தெரிகின்றது.