டொயோட்டா கார்களின் விலை உயர்வு

0
டொயோட்டா கிரிலோஷ்கர் மோட்டார் நிறுவனம் தனது அனைத்து கார்களின் விலையை 1.5 % வரை உயர்த்தியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரிந்து வருவதே இதன் காரணமாகும்.

டொயோட்டா

டொயோட்டா இன்னோவா காரின் விலை ரூ7000 முதல் 11000 வரை உயர்ந்துள்ளது.

எடியோஸ் விலை ரூ.4000 முதல் 8000 வரை உயர்ந்துள்ளது.

எடியோஸ் லிவா விலை ரூ.4500 முதல் 8500 வரை உயர்ந்துள்ளது.

கரோல்லா அல்டிஸ் விலை ரூ.11000 முதல் 24000 வரை உநர்ந்துள்ளது.

இவை அனைத்து டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை உயர்வாகும்.

இதுபற்றி டிகேஎம் (டொயோட்டா கிரிலோஷ்கர் மோட்டார் )கூறுகையில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரிந்து வருவதனால் மூலப்பொருட்களின் விலை உயர்வினை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ளது.

மேலும் இன்னோவா காரின் டாப் மாடலாக புதிய இசட் வேரியன்டினை விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த மாடலில் முகப்பு கிரில் மற்றும் பின்புறத்திலும் சில மாற்றங்களை கண்டிருக்கும் விலை தற்பொழுது உள்ள டாப் மாடலை விட ரூ.30000 வரை விலை அதிகம் இருக்கலாம்.