இந்தியாவில் டொயோட்டா கார்களுக்கு 7 வருடம் வரை வாரண்டி பெறும் வகையில் புதிய திட்டத்தை டொயோட்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. நிரந்தர வாரண்டியான 3 வருடம் அல்லது 1 லட்சம் கிமீ கடந்த பின்னர் கூடுதலாக 4 வருடம் வாரண்டியை இரு விதமான முறையில் பெறலாம்.
டொயோட்டா கார்களுக்கான ஸ்டாண்டர்டு வாரண்டி 3 வருடம் அல்லது 1,00,000 கிமீ என உள்ளது. கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ள வாரண்டி காலம் டொயோட்டா ட்ரூ வாரண்டி (Toyota True Warranty) மற்றும் டொயோட்டா டைம்லெஸ் வாரண்டி ( Toyota Timeless Warranty ) என இருவிதமாக வழங்கப்பட்டுள்ளது.
டொயோட்டா ட்ரூ வாரண்டி (Toyota True Warranty) திட்டம் வாடிக்கையாளரின் கார் நிரந்தர வாரண்டி காலம் 3 வருடம் அல்லது 1,00,000 கிமீ காலத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் வாகனம் வாங்கிய தேதியில் இருந்து 5 வருடங்களுக்குள் இருக்கும் வாகனங்களுக்கு பொருத்தும். மேலும் இந்த திட்டத்தில் வாகனத்தின் பயன்பாட்டினை பொருத்து ரெகுலர் ரன்னிங் , ஹை ரன்னிங் மற்றும் வெரி ஹை ரன்னிங் என மூன்று வகைகளாக பிரித்து 5 வருடம் அல்லது அதிகபட்சமாக 1,80,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற இயலும்.
டொயோட்டா டைம்லெஸ் வாரண்டி ( Toyota Timeless Warranty ) திட்டம் தயாரிப்பாளர் வாரண்டி காலத்தை கடந்த வாடிக்கையாளர்கள் கூடுதலாக வருடத்தினை பொருத்து வாரண்டி பெறாமல் வாகனம் பயன்படுத்தப்படும் கிலோமீட்டர்களை பொருத்து பெறலாம். வருடத்திற்கு 20,000கிமீ வரை பெறலாம். இதன் மூலம் 7 வருடம் அல்லது 1,40,000 கிமீ வரை பெறலாம்.
எட்டியோஸ் லிவா , எட்டியோஸ் , இன்னோவா , கரோல்லா அல்ட்டிஸ் , ஃபார்ச்சூனர் மற்றும் கேம்ரி போன்ற கார்களுக்கு டொயோட்டா 7 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி கிடைக்கும். நீட்டிக்கப்பட்ட வாரண்டி காலத்தில் டொயோட்டா சாலையோர வசதி , டொயோட்டா ஒரிஜனல் பாகங்கள் மற்றும் இந்தியா முழுவதும் சர்வீஸ் பெறலாம்.
அங்கிரிக்கப்பட்ட டீலர்களிடம் சரியான கால இடைவெளியில் வாகனத்தை பராமரிப்பவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி கட்டனம் குறைவாக இருக்கும். தொடர் பராமரிப்பு இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் அதிகமாக இருக்கும்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…