தானியங்கி முகப்பு விளக்குகள் கட்டாயம் – இருசக்கர வாகனம்

0
இருசக்கர வாகனங்களில் தானியங்கி முகப்பு விளக்குகளை வரும் 2017ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இருசக்கர வாகன விபத்தினை பெருமளவு தடுக்க இயலும்.
முகப்பு விளக்கு

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில்  32,524 பேர் இருசக்கர வாகன விபத்துகளால் உயிரிழந்துள்ளனர். 1,27,452 பேர் காங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை தடுக்க பெரும் உதவியாக ஆட்டோமேட்டிக் ஹேட்லைட்கள் விளங்கும்.

ஆட்டோமேட்டிக் ஹேட்லைட்கள் என்ஜின் செயல்பாட்டிற்க்கு வந்த உடனே தானியங்கி முறையில் முகப்பு விளக்கு இயங்க தொடங்கிவிடும் , இடத்திற்க்கும் நேரத்திற்க்கும் ஏற்ப தன் செயல்பாட்டினை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டதாக முகப்பு விளக்குகள் இருக்கும். மேலும் எவ்விதமான தனியான விளக்கு பொத்தான்கள் இருக்காது.

மேலும் கூடுதலாக இந்த திட்டத்தில் சிறப்பு அலாரம் பொருத்தவும் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் உடனடியாக விசேஷ சமிக்ஞைகளை மூலம் அருகாமையில் உள்ள அவசர உதவி மையத்திற்க்கு தெரிவிக்கும் வகையில் செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றது.

மேலும் படிக்க ; ஃபோர்டு அவசரகால உதவி சேவை

AHO என்ற பெயரில் தானியங்கி முகப்பு விளக்கு திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. பைக் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஐரோப்பியா நாடுகளில் 2003ம் ஆண்டு முதல் செயல்பாட்டியில் உள்ள ஏஹெச்ஓ திட்டம் இந்தியாவில் 2017ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.