நிசான் கிக்ஸ் , எக்ஸ்-ட்ரெயில் , கோ க்ராஸ் வருகை விபரம்

இந்தியாவில் ரெனோ-நிசான் கூட்டணியின் வாயிலாக நிசான் நிறுவனம் நிசான் , டட்சன் பிராண்டுகளில் கார்களை விற்பனை செய்து வருகின்றது. நிசான் நிறுவனத்தின் அடுத்த மூன்று ஆண்டுகளுகளில் இந்தியாவில் மூன்று கார்களை விற்பனைக்கு வரவுள்ள கார்களின் விபரம் வெளியாகியுள்ளது.

இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் மாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் செலுத்த முடிவெடுத்துள்ளது. நிசான் பட்ஜெட் பிராண்டான டட்சன் பிராண்டில் பட்ஜெட் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் ஹைபிரிட் எஸ்யூவி கார் மாடலாக நிசான் எக்ஸ்-ட்ரெயில்  விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. எக்ஸ்-ட்ரெயில் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன்  விலை ரூ. 28 லட்சத்தில் அமையும். அடுத்த சில மாதங்களில் எக்ஸ்-ட்ரெயில் கிடைக்கும்.

க்ரெட்டா மாடலுக்கு நேரடியான போட்டி மாடலாக உள்ள நிசான் கிக்ஸ் எஸ்யூவி  (code name-PB1D) இந்திய சந்தைக்கு வருகின்ற 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.  கிக்ஸ் எஸ்யுவி காரின் விலை ரூ.8 முதல் ரூ.15 லட்சத்திற்குள் அமையும்.

நிசான் பட்ஜெட் பிராண்டான டட்சனில் கோ க்ராஸ் (code name- EM2) என்ற பெயரிலான க்ராஸ்ஓவர் ரக மாடலை 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தொடக்கநிலை க்ராஸ்ஓவர் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

ரெனோ-நிசான் நிறுவனத்தின் கூட்டணியில் உருவான மாடலான டஸ்ட்டர்  மாடலை போல  டெரோனோ எஸ்யூவி வரவேற்பினை பெறவில்லை. நிசான் நிறுவனத்தின் மொத்த பங்களிப்பில் டட்சன் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது.

இந்தியாவிற்கு ரெனோ-நிசான் கூட்டணியில் உருவாகி வரும் புதிய CMF-A+ மற்றும் CMF-B என இரண்டு பிளாட்பாரத்திலும் மொத்தம் 8 மாடல்கள் உருவாக்கப்பட உள்ளது. இவற்றில் 5 மாடல்கள் எஸ்யூவி ரகத்தினை சார்ந்ததாக இருக்கும்.  CMF-A தளத்தில் உருவாக்கப்பட்ட க்விட் , ரெடி-கோ காரை போல இதே தளத்தில் மினி ஹைபிரிட் செடான் மாடலை உற்பத்தி செய்யவும் நிசான் திட்டமிட்டுள்ளது.

 

Exit mobile version