நிசான் ஜிடி-ஆர் கார் பற்றி அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்

உலக பிரசத்தி பெற்ற நிசான் ஜிடி-ஆர் கார் இந்தியாவில் ரூ.1.99 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிடி-ஆர் ஸ்போர்ட்டிவ் கார் பற்றி யாரும் அதிகம் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மேட் இன் ஜப்பான்

உலக தரமான பல்வேறு தொழிற்சாலைகளை சர்வதேச அளவில் பலநாடுகளில் பெற்றுள்ள நிசான் நிறுவனம் தங்களுடைய சிறப்பு ஸ்போர்ட்டிவ் காரான ஜிடி-ஆர் மாடலை ஜப்பான் நாட்டில் உள்ள தலைமை தொழிற்சாலையில் மட்டுமே உற்பத்தி செய்கின்றது.  உலகின் பெரும்பாலான நாடுகளில் ஜிடி-ஆர் விற்பனை செய்யப்பட்டாலும் அனைத்து கார்களுமே ஜப்பான் நாட்டில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றது.

கைகளால் தயாரிக்கப்படும் என்ஜின்

உலகமயமாக்கலால் மிக நவீன ரோபக்களை கொண்டு கார் நிறுவனங்கள் இயங்கி வருகின்ற நிலையில் ஜிடி-ஆர் காரில் இடம்பெற்றுள்ள என்ஜின் கைகளால் வெறும் 4 நபர்களால் மட்டுமே வடிவமைக்கப்படுகின்றது. ஒரு இன்ஜின் ஆரம்பிக்கும் ஒருவரால் மட்டுமே முழுமையாக வடிவமைக்கப்படுகின்றது. கட்டமைத்த பின்னர் அவரின் பெயரானது என்ஜினில் இடம்பெறும். ஜிடி-ஆர் 3.8 லிட்டர் ட்வீன் டர்போ என்ஜினில் 374 பாகங்கள் உள்ளது. இந்த நால்வரை ஜப்பான் மொழியில் டக்குமி (takumi – கைவினைஞர்) என அழைக்கிறார்கள்.

கைகளால் என்ஜின் வடிவமைப்பதனால் ஒவ்வொரு என்ஜின் ஆற்றலும் சற்று வித்தியாசப்படும். அனைத்து கார்களும் ஒரே பவரை வெளிப்படுத்தாது.

காட்ஜில்லா

ஜிடி-ஆர் காரை செல்லமாக காட்ஜில்லா (Godzilla) என அழைப்பார்கள். ஜப்பானியர்கள் ஜிடி-ஆர் காரை Obakemono என அழைத்தார்கள்.இதன் பொருள் மான்ஸ்டர் கிங்  ஆகும். அதனை தொடர்ந்து முதலில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த வீல்ஸ் என்ற மோட்டார் பத்திரிக்கை காட்ஜில்லா என அழைத்தது. இதனை தொடர்ந்தே காட்ஜில்லா என்ற பெயர் ஜிடி-ஆர் காருக்கு செல்ல பெயரானது.  தற்பொழுது இதனை ஜப்பான் நாட்டினர்  காஜிரா (Gojira) என உச்சரிக்கின்றனர். காஜிரா என்றால் மான்ஸடர் கிங் ( King of Monsters) என்பது பொருளாகும்.

50 ஆண்டுகால வரலாறு

கடந்த 1969 ஆண்டில் வெளிவந்த நிசான் ஸ்கைலைன் என்ற மாடலில்தான் முதன்முறையாக ஜிடி-ஆர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது.

உலகின் மிக விரைவான கார் ஜிடி-ஆர்

4 இருக்கை கொண்ட உறபத்தி நிலையில் உள்ள மற்ற சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களை விட மிக குறைவான நேரத்தில் அதாவது 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 3 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

நிசான் ஜிடி-ஆர் கார் படங்கள்

 

 

Exit mobile version