நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ஹியர் மேப்பை ஆடி , பிஎம்டபிள்யூ மற்றும் டெய்ம்லர் நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளது. எதிர்கால தானியங்கி கார்களுக்கு ஏற்ற நேவிகேஷன் மேப்பினை உருவாக்கும் நோக்கில் வாங்கப்பட்டுள்ளது.
உலகின் பிரபலமான சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி , பிஎம்டபிள்யூ மற்றும் டெய்ம்லர் 2.55 பில்லியன் யூரோ மதிப்பிற்கு வாங்கியுள்ளதாம். ஹியர் மேப்பில் தற்பொழுது 80,000க்கு மேற்பட்ட இடங்களின் நேவிகேஷன் மேப் உள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் இது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வந்தது தற்பொழுது விற்பனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரல் வழிகாட்டியுடன் செயல்படக்கூடிய இந்த மேப் மிக சிறப்பாகவும் துல்லியமாக இடத்தினை காட்டும் திறன் கொண்டதாகும். நிகழ்நேர தகவலை மிக துல்லியமாக சென்சார் வழியாக தானியங்கி வாகனங்ளை செயல்படுத்தவும் மற்ற வாகனங்களுக்கு தகவல்களை அனுப்புவும் ஏற்ற வகையில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவும் மூன்று நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது.
ஹியர் மேப் தலைவர் ஃபெர்ன்பேக் கூறுகையில் மிகசிறந்த மூன்று ஆட்டோமொபைல் நிறுவனங்களும் நோக்கியா ஹியர் மேப் மூலம் சிறப்பான சேவையை மக்களுக்கு பாதுகாப்பான பயணத்தினை தரவும் மாசு உமிழ்வினை குறைக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.