ந.சந்திரசேகரன் : டாடா சன்ஸ் குழும தலைவர் – updated

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சந்திரா என அழைக்கப்படும் ந.சந்திரசேகரன் (53) டாடா குழுமத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி ஐடி பிரிவின் தலைமை செயல் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் சைரஸ் மிஸ்த்ரி நீக்கப்பட்டதை தொடர்ந்து டாடா சன்ஸ் நிறுவனதலைவர் ரத்தன் டாடா உட்பட 5 பேர் கொண்ட குழுவினரால் சந்திரசேகரன் தேர்வு செய்யபட்டுள்ளார்.

தமிழர்

என்.சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர். இவர், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஎஸ்சி அப்ளைடு சயின்சும், திருச்சி ஆர்.இ.சி, இன்ஜினியரிங் கல்லூரியில் முதுநிலை கம்ப்யூட்டர் அப்ளிகேஷனிலும் பட்டம் பெற்றார். 1987 ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தின் பணியில் இணைந்த பின்னர் பல்வேறு பதிவுகள் மற்றும் திட்டங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டதை தொடர்ந்து டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரியாக பயணியாற்றி வந்தார்.

டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் டாடா ஸ்டீல் , டாடா மோட்டார்ஸ் , டாடா கன்சல்டன்சி , டாடாவின் ஜாகுவார் லேண்ட்ரோவர் மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் (தாஜ் ஹோட்டல்) போன்ற நிறுவனங்களுக்கு தலைவராக சந்திரசேகரன் செயல்படுவார்.

டாடா மோட்டார்ஸ்

டாடாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சந்திரசேகரன் அவர்கள் டாடா மோட்டார்சின் தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டாடாவின் அடுத்தடுத்த மாடல்களான டியாகோ காரின் அடிப்படையிலான கைட் 5 செடான் , நெக்ஸான் எஸ்யூவி போன்ற மாடல்களின் திட்டத்தை விரைவுப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் வருகின்ற ஜனவரி 18ந் தேதி அதாவது இன்று டாடா ஹெக்ஸா எம்பிவி கார் விற்பனைக்கு வரவுள்ளது.

updated :

டாடா குழுமத்தின் தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நடராஜன் சந்திரசேகரன், ‘டாடா குழுமத்துக்குத் தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

Exit mobile version