ஆர்இ60 குவாட்ரிசைக்கிள் தற்பொழுது பஜாஜ் சோதனை செய்து வருகின்றது. சோதனை படங்களை ஆட்டோகார் இந்தியா வெளியிட்டுள்ளது. குவாட்ரிசைக்கிள் என்றால் ஆட்டோரிக்ஷாவுக்கும் காருக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள வாகனமாகும். இதனால் எந்த பிரிவில் அனுமதி வழங்குவது என மத்திய அரசு ஆய்வு செய்து வருகின்றது.
இவற்றில் மிக குறைவாகவே பாதுகாப்பு இருக்கும் என்பதே பலரின் கருத்து ஆனால் இதனை ஆட்டோரிக்ஷாவிற்க்கு மாற்றாகவும் அதனைவிடவும் பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும் கார்பன்டை ஆக்ஸைடு குறைவாகவே வெளிவரும் என பஜாஜ் தெரிவித்துள்ளது.
ஆர்இ60 குவாட்ரிசைக்கிளில் 216 சிசி DTSi பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 20 பிஎச்பி வரை வெளிப்படுத்தும்.
இதன் இருக்கை அமைப்புகள் 2+2 அல்லது 1+3 என இருக்கலாம். மேலும் பூட் ஸ்பேஸ் 40 லிட்டர் இருக்கும்.