Automobile Tamil

பஜாஜ் பல்சர் சிஎஸ்400 மோட்டார்சைக்கிள் விரைவில்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பஜாஜ் பல்சர் சிஎஸ்400 என்ற பெயரிலான க்ரூஸர் ஸ்போர்ட்ஸ் மாடலை 2014  ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது. தற்பொழுது பல்சர் சிஎஸ்400 பைக் உற்பத்தி  நிலை எட்டி சோதனை ஓட்டத்தில் இறுதி கட்டநிலையில் உள்ளதால் இந்த வருடத்தின் மூன்றாவது காலண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

Bajaj-Pulsar-CS400-side-spied

 

கேடிஎம் டியூக் 390 மற்றும் ஆர்சி390 போன்ற பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 44PS ஆற்றலை வெளிப்படுத்தும் 373சிசி சிங்கிள் சிலிண்டர் FI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 35Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ்பொருத்தப்பட்டிருக்கும்.  இந்த என்ஜின் ஆற்றலை அதிகரித்து பொருத்தப்பட்டிருக்கலாம்.

கான்செப்ட் மாடலுக்கு ஏற்ற வகையிலே அமைந்துள்ள சிஎஸ்400 பைக்கில் சில மாற்றங்களை உற்பத்திநிலை பைக் பெற்றுள்ளது. குறிப்பாக முன்பக்க சஸ்பென்ஷன் யூஎஸ்டி ஃபோர்க்குகளை பெறவில்லை மாற்றாக டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு , ஒற்றை இருக்கைக்கு பதிலாக ஸ்ப்ளிட் இருக்கைகளை பெற்றுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்ப்சார்பரை கொண்டுள்ளது.

மிகவும் ஸ்டைலிசான் முகப்பு மற்றும் இரு பிரிவான எல்இடி டெயில் விளக்கு , பக்கவாட்டில் கான்செப்ட் தோற்றத்தினை தழுவியே உள்ளது. கேடிஎம் டியூக் 390 மாடலின் பல தாத்பரியங்களை பெற்றே இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வெளியான படங்களில் ஏபிஎஸ் இல்லாத மாடல்கள் காட்சியளித்தது. தற்பொழுது டியூவல் ஏபிஎஸ் உள்ள மாடல் வெளியாகியுள்ளது.

எனவே பல்சர் ஆர்எஸ்200 பைக் போலவே இரு வேரியண்டில் வரலாம். மேலும் இது சிவப்பு வண்ண பல்சர் சிஎஸ் 400 ஆகும்.ஏபிஎஸ் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவற்றை பெற்றிருக்கும்.

வருகின்ற ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் பல்சர் சிஎஸ்400 பைக் விலை ரூ.2 லட்சத்தில் ஆன்ரோடு விலை அமைந்திருக்கும்.

 

மேலும் படிங்க ; பஜாஜ் பல்சர் CS400 முக்கிய விபரங்கள்

 

படங்கள் உதவி ; indianautosblog

Exit mobile version