Home Auto News

பஜாஜ் சிடி100 பைக் விலை குறைகின்றது ?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிடி100 பைக் விலையை குறைக்கவும் , பிளாட்டினா பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 100 கிமீ ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.  பஜாஜ் CT100 விலை ரூ.35,000 க்குள் கொண்டு வரவுள்ளது.

bajaj platina es blue
பஜாஜ் பிளாட்டினா ES

ஊரக பகுதி தவிர மற்றபகுதிகளில் மறு விற்பனைக்கு வந்த பஜாஜ் சிடி100 கடந்த சில மாதங்களாக நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து மாத விற்பனையில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து வருகின்றது. எனவே சிடி100 பைக் விலையை ரூ.35,000த்திற்குள் கட்டுப்பட்டுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையை அதிகரிக்கவும் தனது சந்தையின் பங்களிப்பினை கூட்டவும் பஜாஜ் திட்டமிட்டு வருகின்றது.

மேலும் மற்றொரு பைக் மாடலான பஜாஜ் பிளாட்டினா தற்பொழுது லிட்டருக்கு 96.8 கிமீ தருகின்றது . இதே பைக்கினை லிட்டருக்கு 100கிமீ மைலேஜ் தரும் வகையில் உயர்த்தவும் பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இதனால் ஸ்பிளென்டர் ப்ளஸ் i3S பைக்கிற்கு இணையாக மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்த உள்ளனர்

சில நாட்களுக்கு முன்பு நாம் வெளியிட்டிருந்தோம் டிஸ்கவர் பைக் வரிசைக்கு மாற்றாக புதிய கம்யூட்டர் ரேன்ஜ் பைக்கினை பஜாஜ் உருவாக்கி வருவதனை சோதனை படங்கள் மூலம் தெரியப்படுத்திருந்தோம். இந்த பைக் அவென்ஜர் க்ரூஸர் மற்றும் பல்சர் என இரண்டின் இணைப்பில் உருவாகும் மாலாக இருக்கலாம்.

இந்த மாடல்களை அடுத்தடுத்து சில மாதங்களில் பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும். இது மட்டுமல்லாமல் மீண்டும் டிவிஎஸ் விக்டர் வருகின்றது.

Exit mobile version