Automobile Tamil

பஜாஜ் பல்சர் CS400 வருகை எப்பொழுது ?

இதய துடிப்பை எகிற வைக்கும் புதிய பஜாஜ் பல்சர் CS400 க்ரூஸர் வகை நேக்டு ஸ்போர்ட்டிவ் மாடல் தீவர சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. 2014 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக பல்சர் சிஎஸ்400 காட்சிக்கு வந்தது.

bajaj-pulsar-cs400

கேடிஎம் டியூக் 390 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே 375சிசி என்ஜினை பல்சர் சிஎஸ்400 பைக்கிற்க்கு ஏற்ற வகையில் ட்யூனிங் செய்து பொருத்தப்பட்டிருக்கும்.இதில் மூன்று ஸ்பார்க் பிளக்குகளை பெற்றுள்ளது. 40hp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தோற்றத்தில் சிஎஸ்400 கான்செப்ட் மாடலை சார்ந்தே அமைந்துள்ள உற்பத்தி நிலை மாடலில் ஸ்பிளிட் இருக்கைகள் , பிளாக் மேட் வண்ண புகைப்போக்கி , O2 சென்சார் போன்றவற்றுடன் எம்ஆர்எஃப் ரெவஸ் சீரிஸ் டயர்களை பெற்றுள்ளது. மேலும் தற்பொழுது வெளியாகியுள்ள சில சோதனை ஓட்ட பங்களில் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு , ஏபிஎஸ் இல்லாத மாடல் போன்றவை வெளிவந்துள்ளது.

கான்செப்ட் காட்சிக்கு வந்த பொழுது முன்பக்க சஸ்பென்ஷன் அப்சைட் டவுன் ஃபோர்க்குகளை பெற்றிருந்தது. ஆனால் சோதனை ஓட்டத்தில் கன்வென்சனல் ஃபோர்க்குகளுடன் பின்புறத்தில் நைட்ரக்ஸ் கேஸ் மோனோ சாக் அப்சார்பரினை பெற்றிருக்கும். டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ஆர்பிஎம் , ஃப்யூவல் லெவல் , ஓடோமீட்டர் , கியர் பொசிசன் போன்றவற்றை டிஸ்பிளே செய்யலாம் என தெரிகின்றது. ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக இடம்பெற்றிருக்கலாம்.

தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ளதால் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பஜாஜ் பல்சர் CS400  விற்பனைக்கு வரலாம். சிஎஸ்400 பைக் விலை ரூ. 2 லட்சத்தில் ஆன்ரோடு விலை அமைய வாய்ப்புள்ளது.

Exit mobile version