பஜாஜ் விஎஸ்400 க்ரூஸர் பைக் புதிய பிராண்டில்

0

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு புதிய பிரிவுகளில் தனது மாடல்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் பிரிமியம் நடுத்தர தொடக்கநிலையான 400 சிசி பிரிவில் வரவுள்ள பஜாஜ் விஎஸ்400 பைக்கிற்கு பல்சர் பிராண்டுக்கு மாற்றாக புதிய பிராண்டினை அறிமுகம் செய்ய உள்ளது.

 

Google News

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வி பிராண்டினை தொடர்ந்து வரவுள்ள புதிய பிராண்டில் வரவுள்ள முதல் மாடலான விஎஸ்400 என்ற பெயரில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாத மத்தியில் எதிர்பார்க்கப்படும்.

க்ராடோஸ் விஎஸ்400 இன்ஜின்

பஜாஜ் விஎஸ் 400 பைக்கில் 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். விஎஸ்400 பைக்கின் எடை 332 கிலோகிராம் ஆகும்.

பல்சர் பிராண்டில் பல்சர் 135 எல்எஸ், 150 ,180 , 200  மற்றும் 220 போன்ற மாடல்கள் விற்பனையில் உள்ளதால் தொடர்ந்த பல்சர் பிராண்டில் புதிய மாடலாக விஎஸ்400 அறிமுகம் செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு அறிந்து கொள்வதில் சிரமமாக இருக்கும் என பஜாஜ் கருதுவதனால்  புதிய பிராண்டினை பஜாஜ் திட்டமிட்டுள்ளதாம். மேலும் பல்சர் வரிசையில் உள்ள  150, 180 மற்றும் 220 பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட புதிய பல்சர்கள் இந்த வருட இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ளது.

பஜாஜ் விஎஸ்400 பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ. 2 லட்சத்தில் ஆன்-ரோடு விலை அமையலாம்.