சமீபத்தில் பஜாஜ் வி பிராண்டில் வி15 பைக்கினை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. வி15 பைக் வெற்றி பெற்றால் மேலும் சில மாடல்களை வி பிராண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றி விக்ராந்த போர்க்கப்பல் உடைக்கப்பட்ட பொழுது அதன் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட டேங்கினை கொண்டுள்ள வி15 பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான தொடக்க வரவேற்பினை பெற்றுள்ளது.
நியோ கிளாசிக் வடிவ தாத்பரியங்களுடன் கஃபே மற்றும் க்ரூஸர் பைக் தாத்பரியங்களுடன் 150சிசி கம்யூட்டர் பைக் பிரிவில் வந்துள்ள வி15 பைக்கில் 12 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 13 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. பஜாஜ் வி15 பைக் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ எட்டலாம்.
முதல் வருடத்தில் மாதம் 20,000 பைக்குகளை முதற்கட்ட இலக்காக நிர்னைத்துள்ள பஜாஜ் படிப்படியாக உயர்த்தி அடுத்த வருடத்தில் மாதம் 50,000 பைக்குளை விற்பனை செய்ய இலக்கு நிர்னைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ; பஜாஜ் வி15 பைக் தமிழக விலை
வி பிராண்டில் அவென்ஜர் 220 பைக்கில் உள்ள 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டு கூடுதல் செயல்திறனுடன் பஜாஜ் வி220 என்ற பெயரில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
[envira-gallery id=”5741″]