பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக் மிக விரைவில்

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபுள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள முதல் பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிஎம்டபுள்யூ ஜி310 ஆர் பைக்கினை டிவிஎஸ் மோட்டார்ஸ் தயாரிக்க உள்ளது.

BMW G310R India

சமீபத்தில் வெளியான G310R பைக் சென்னை- பெங்களூரூ நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் இருந்த பைக்கின் படங்கள் மற்றும் வீடியோவினை பேஸ்புக் சென்னை  சிபிஆர் பைக் ரைடர்ஸ் வெளியிட்டுள்ளது.

மிக நேர்த்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் வெளியாகவுள்ள ஜி310ஆர் பைக்கில் 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 25கிமீ முதல் 28 கிமீ வரை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் ஜி310ஆர் பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 170 கிமீ இருக்கலாம்.

முன்பக்கத்தில் அப்சைட் டவுன் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் , முன் மற்றும் பின் பக்க டயர்களில் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இருக்கும். மேலும் 17 இன்ச் அலாய் வீலில் 5 ஸ்போக்குகள் பெற்றிருக்கும்.

சர்வதேச மாடலை விட இந்திய மாடல் சில மாறுதல்களை பெற்றிருக்கும் . மேலும் டிவிஎஸ்-பிஎம்டபிள்யூ லோகோவினை பெற்றிருக்கலாம். வருகின்ற அக்டோபர் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்பொழுது டெல்லியில் மட்டும் உள்ள பிஎம்டபிள்யூ மோட்டார்டு டீலரை முதற்கட்டமாக பிஎம்டபுள்யு மோட்டார்டு டீலர்களை சென்னை , பெங்களூரூ , மும்பை , அகமதாபாத் போன்ற நகரங்களில் அறிமுகம் செய்யலாம்.

பிஎம்டபுள்யு ஜி310ஆர் பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.3 லட்சமாக இருக்கலாம்.

 

BMW G310R India
BMW G310R India

Share