பிஎம்டபுள்யூ 5 சீரிஸ் பெட்ரோல் மாடல் அறிமுகம்

பிஎம்டபுள்யூ 3 சீரிஸ் பெட்ரோல் மாடலை தொடர்ந்து பிஎம்டபுள்யூ 5 சீரிஸ் பெட்ரோல் கார் மாடலில் லக்சூரி லைன் வேரியண்ட் ரூ. 54 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

BMW-5-series-petrol

டெல்லி மற்றும் தலைநகர் பகுதியை தொடர்ந்து கேரளாவில் சில மாவட்டங்கள் என நீட்டிக்கப்பட்டுள்ள 2000சிசி மற்றும் அதற்க்கு மேற்பட்ட சிசி கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கான தடை சென்னை உள்பட 11 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட வாயப்புள்ளதால் பிஎம்டபுள்யூ பெட்ரோல் வேரியண்ட் மாடல்களை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது.

சென்னையில் டீசல் கார் தடை வருகின்றதா

பிஎம்டபிள்யூ 520i லக்சூரி லைன் டாப் வேரியண்டில்  184 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ட்வீன் பவர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 270 Nm ஆகும். இதில் 8 வேக ஸ்டெப்ட்ரானிக் ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 7.9 விநாடிகள் மற்றும் பிஎம்டபிள்யூ 520i காரின் உச்ச வேகம் மணிக்கு 233 கிமீ ஆகும். சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை வழங்கும் பிஎம்டபிள்யூ எஃபிசென்ட் டைனமிக்ஸ் நுட்பத்தில் என்ஜின் ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் , பிரேக் ரீஜெனேரேட்டிவ் சிஸ்டம் , ஈக்கோ புரோ டிரைவிங் மோட் போன்றவற்றுடன் கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் மோட்களை பெற்றுள்ளது.

10.2 இன்ச் பிஎம்டபிள்யூ ஐடிரைவ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்றுள்ள 520i வேரியண்டில் பிஎம்டபுள்யூ ஆப்ஸ் , பிஎம்டபுள்யூ நேவிகேஷன் சிஸ்டம் , ரியர் வியூ கேமரா மேலும் பல.. வசதிகளை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 520i பெட்ரோல் விலை ரூ.54 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

பிஎம்டபிள்யூ 520i முழுவதும் வடிவமைக்கபட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படுகின்றது. டீசல் மாடல்களான 520d மற்றும் 530d மாடல்கள் சென்னை பிஎம்டபுள்யூ ஆலையில் ஒருங்கினைக்கப்படுகின்றது.

 

Exit mobile version