புகாட்டி சிரான் ஹைப்பர்கார் விபரம்

புகாட்டி சிரான் ஹைப்பர் காரின் ஆற்றல் விபரங்கள் மற்றும் உச்ச வேகம் போன்றவை தற்பொழுது உறுதியாகியுள்ளது. புகாட்டி சிரான் கார் விலை 2 மில்லியன் யூரோக்கள் இருக்கலாம் என தெரிகின்றது.

உலகின் மிக உச்ச வேகத்தை கொண்டுள்ள உற்பத்தி நிலை காராக கருதப்படும் புகாட்டி வேயரான் காரின் அடுத்த தலைமுறை மாடலான சிரான் காரினை முன்பதிவு செயதுள்ள வாடிக்கையாளரின் மூலம் தற்பொழுது இந்த விபரங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக நாம் வெளியிட்டிருந்த பதிவில் மணிக்கு 500கிமீ வேகத்தை புகாட்டி சிரான் எட்டலாம் என ஊக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்பொழுது அது 500கிமீ வேகத்தை காட்டும் வகையிலான ஸ்பீடோமீட்டரை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

முக்கிய குறிப்புகள்

என்ஜின் : 8 லிட்டர் W16 என்ஜின்

ஆற்றல் : 1500ஹெச்பி

டார்க் ; 1500 என்எம்

உச்ச வேகம் ; மணிக்கு 467 கிமீ

0 -100 கிமீ எட்ட : 2.2 விநாடிகள்

விலை ; 2 மில்லியன் யூரோ

விற்பனை எண்ணிக்கை ; 500 கார்கள்

விற்பனை ஆண்டுகள் ; 5 வருடம் ( ஆண்டிற்கு 100 கார்கள் )

முன்பதிவு ; இதுவரை 130 சிரான் ஹைப்பர்கார்களுக்கான முன்பதிவு முடிந்துள்ளதாம்.

தகவல் ; புரோ டிரைவர் பேஸ்புக்